Advertisement

அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.22 ஆயிரம் அபராதம்

Share
புதுச்சேரி:புதுச்சேரியில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிக்கு ரூ. 22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்க மத்திய அரசு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபாராத தொகையை அதிகரிக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்தது. இந்த சட்ட திருத்தம், நாடு முழுவதும் கடந்த செப். 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.புதுச்சேரியில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்ய துவங்கியுள்ளனர்.
வில்லியனுார் போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில் கடந்த 5ம் தேதி, வடமங்கலத்தில் இருந்து கடலுார் நோக்கி, கெமிக்கல் ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அளவுக்கு அதிகமாக கெமிக்கல் ஏற்றிச் செல்வது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, லாரி டிரைவர் விழுப்புரம், கோலியனுாரை சேர்ந்த ரிஷ்வந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தனர். நீதிபதிகள், அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ. 22 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement