Advertisement

விடுதலை புலிகளுக்கு தடை உறுதி செய்தது தீர்ப்பாயம்

புதுடில்லி: விடுதலை புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர, தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், கொல்லப்பட்டார். அதையடுத்து, விடுதலை புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை தொடருவது குறித்து விசாரிக்க, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஐந்து பேர் கொண்ட தீர்ப்பாயம், மே மாதத்தில் அமைக்கப்பட்டது.இந்த தீர்ப்பாயம் டில்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, தனது அறிக்கையை, இந்த தீர்ப்பாயம், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.அதில், 'விடுதலைப் புலிகள் மீதான தடையைத் தொடரலாம்' என, குறிப்பிடப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement