Advertisement

காற்று மாசை தடுக்க அரசு நடவடிக்கை; மக்கள் அச்சமடைய வேண்டாம்

Share
சென்னை : ''காற்று மாசை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்,'' என, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

காற்று மாசு அதிகரித்துள்ளது தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று, அமைச்சர் உதயகுமார் தலைமையில், நேற்று நடந்தது. கூட்டத்தில், வருவாய் துறை பொறுப்பு செயலர் ககன்தீப்சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர், ஐ.ஐ.டி., பேராசிரியர் நாகேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆய்வு கூட்ட முடிவில், அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: ஒரு வாரமாக, சென்னையில் அதிகாலையில் மேக மூட்டமாக இருப்பதற்கான காரணம் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது.

பல்வேறு காரணங்கள்



'புல்புல்' புயல் ஏற்பட்டதால், மேகம் தாழ்வான நிலைக்கு வந்ததுள்ளது. இதனால், சூரிய கதிர்கள் முழுமையாக உள்ளே வராததும், காற்றின் ஈரப்பதம் குறைவாக இருந்ததாலும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. காற்று மாசுக்கு, வாகனங்களிலிருந்து வரும் புகை, கட்டட துாசி உட்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஒரு வாரத்தில் ஏற்பட்ட நிலைக்கு, மேகம் கீழே இறங்கியதே காரணம். சென்னையில் எட்டு இடங்கள் உட்பட, மாநிலத்தில், 28 இடங்களில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசு குறித்து, கண்காணித்து வருகிறது. சென்னையில் இரண்டு இடங்களில், காற்று மாசு அதிகமாக உள்ளது. காற்று மாசு காரணமாக, சுவாச பிரச்னை எங்கும் ஏற்படவில்லை.

படிப்படியாக காற்றின் மாசு குறைந்து வருகிறது. காற்று மாசை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன. சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில், மரம், டயர் மற்றும் குப்பைகள் எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைப் பணிகள், கட்டடப் பணிகள் நடக்கும் இடங்களில், துாசு ஏற்படுவதை தடுக்க, தேவைக்கேற்ப தண்ணீர் தெளித்து, துாசியின் அளவை முற்றிலும் குறைக்க, கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. வாகனத்திலிருந்து வெளியேறும் புகையால் ஏற்படும் மாசை தடுக்க, போக்குவரத்து துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. இப்பணிகளை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் வழியே, தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பொதுமக்கள்



'சென்னையில் ஏற்பட்டுள்ள காற்றின் மாசுக்கு, கடல்காற்று எதிர்பார்த்த அளவு வீசாதது தான் முக்கியக் காரணம். காற்று மாசு படிப்படியாக குறையும்' என, இந்திய வானிலை ஆய்வு மையமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தெரிவித்து உள்ளன. பொதுமக்கள் காற்று மாசு ஏற்படும், எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம். காற்று மாசை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் காற்று மாசு தொடர்பாக, எந்தவித அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Ram Sundar - Chennai,இந்தியா

  நடிக்காதிங்க டா அதான் டெல்லி நாலா மாசு இங்க வந்ததுனு தெரியுமே இப்ப மழைனால மாசு குறையும்நும் எல்லார்க்கும் தெரியும் நீங்க சும்மா இருங்க அதான் உங்க தினசரி வேலை ல

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  வாகனப்புகைதான் மாசுக்கு முக்கிய காரணம் . வாகனப்பெருக்கத்தைக் குறைக்கவேண்டும் பொதுப்போக்குவரத்தை அதிகரிக்கவேண்டும் தனியார் வாகன எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவேண்டும் என கூறினாலோ எழுதினாலோ பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோலப் பார்க்கிறார்கள் .இப்போது ஏற்பட்டுள்ள மாசால் லட்சக்கணக்கானோருக்கு நுரையீரல் நோய்களும் ஆயிரக்கணக்கானோருக்கு கேன்சரும் வரலாம் அந்தப் பாவம் அவர்களுக்கே

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  வாகனப்புகைதான் மாசுக்கு முக்கிய காரணம் . வாகனப்பெருக்கத்தைக் குறைக்கவேண்டும் பொதுப்போக்குவரத்தை அதிகரிக்கவேண்டும் தனியார் வாகன எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவேண்டும் என கூறினாலோ எழுதினாலோ பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோலப் பார்க்கிறார்கள் .இப்போது ஏற்பட்டுள்ள மாசால் லட்சக்கணக்கானோருக்கு நுரையீரா நோய்களும் ஆயிரக்கணக்கானோருக்கு கேன்சரும் வரலாம் அந்தப் பாவம் அவர்களுக்கே

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  காற்று மாசை தடுக்க அரசு நடவடிக்கை மக்கள் அச்சமடைய வேண்டாம்.. அது என்னான்னு ஒரு வரியில் சொல்றியா? உன்னோட ஊழல் உன்னையும் உன் சந்ததியையும் அழிக்கிறது.. சாவுங்கடா..

Advertisement