கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, காங்., ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராக இருந்தார். அப்போது, அரசுக்கு எதிராக, காங்., மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த, 17 பேர் போர்க்கொடி துாக்கினர். தங்களுடைய எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், இவர்களுடைய ராஜினாமாவை ஏற்காமல், அப்போது சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார், இவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதையடுத்து, எடியூரப்பா முதல்வரானார்.
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு; நாளை தீர்ப்பு

வாசகர் கருத்து (7)
தயவு செய்து வேலை மற்றும் படிப்பில் இட ஒதிக்கீட்டை ஒரு தலைமுறைக்கு மட்டும் கொடுக்கவும். தொடர்ந்து அனுபவித்தவர்கள் அனுபவிக்கிறார்கள். இட ஒதுக்கீட்டில் ஒருமுறை பயன் பெற்றவர் குடும்பம் "முன்னேறிய குடும்பம்தான்". இப்படி அவர்களே தொடர்ந்து அனுபவிப்பதால், (அதே இனத்தை சேர்ந்தவர்கள் கூட) மற்றவர்கள் அனுபவிக்க முடியாது போகிறது. இதை அவசர வழக்க எடுத்து ரஞ்சன் கோகாய் அவர்கள் சிறந்த தீர்ப்படி உடனே கொடுக்க வேண்டும். என்னுடன் படித்த நண்பன் இட ஒதுக்கீட்டில் படித்தது, நல்ல வேலை பெற்று, பதவி உயர்வு பெற்று லட்ச கணக்கில் சம்பாதிக்கிறான். இப்போது இதே அவன் பிள்ளைகளுக்கும் நடக்கிறது. ஆனால், நான் இன்றும் வேலை தேடித்தான் அலைந்து கொண்டிருக்கிறேன்.
அரசியல் சட்டம் அதுதான். சட்டமன்றத்தை பொறுத்தவரையில் சபாநாயகருக்குத்தான் அதிகாரம். இதை முதலிலேயே நீதிமன்றம் சொல்லி வழக்கை ஏற்கக்கூடாது.
இன்னொரு மகாராஷ்டிரா வா என்று தெரியும் ...கள் இறங்குமுகம் தொடங்கிவிட்டது
ஒரு முடிவுக்கு கொண்டாங்க நீதிபதி அவர்களே..இந்த சபாநாயகரோட அலும்பு தாங்க முடியலைங்க. எப்ப பார்த்தாலும் எனக்குதான் வானளாவிய அதிகாரம் இருக்கு. என்னோட முடிவுல நீதிமன்றம் தலையிட முடியாதுன்னு விண்ணை தாண்டி குதிக்கிறாங்க எல்லா மாநிலத்திலுமே இதுபோல கண்ராவித்தனம் நடக்குது. இதனை நிச்சயம் இந்த தீர்ப்பின் மூலம் கட்டுப்படுத்தவேண்டும் என்பதுதான் ஒவ்வோர் குடிமகன்களின் ஆசை.பேராசையும் கூட. கட்டுப்படுத்துவீங்களா..இல்ல..அவுக தீர்ப்புதான்ன்னு சொல்லிட்டு தப்பிச்சுப்பீங்களா..
மத்திய அரசு நினைத்தால் தீர்ப்பு வரும். இல்லாட்டி வராது. தமிழக MLA 18 பேர் வழக்கு, மற்றும் 11 பேர் வழக்கு நீதி மன்றம் நீதி வழங்க எடுத்துக் கொண்ட காலம் எவ்வளவு. கர்நாடக விவகாரத்தில் எவ்வளவு. இந்த அளவு நீதி மன்றங்கள் ஆளும் அரசுகளுக்கு அஞ்சியோ அல்லது பிற்கால பலன்களை எண்ணியோ நீதியை வளைப்பது என்பது நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் நல்லதே அல்ல.