Advertisement

ஆயுதம், வீரர்கள் குவிப்பு ; எல்லையில் பாக்., சேட்டை

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் உள்ள, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் மற்றும் ஆயுதங்களை, பாகிஸ்தான் தரப்பு குவித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், இந்தியா - பாக்., இடையே, பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் உள்ள குடியிருப்பு பகுதிகளை நோக்கி, பாக்., படையினர் திடீர் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அந்நாட்டு ராணுவ உதவியுடன், இந்திய பகுதிக்குள் ஊடுருவ, பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆய்வறிக்கைஇந்நிலையில், எல்லையில் நிலவும் தற்போதைய நிலை குறித்து, மத்திய அரசிடம், நம் ராணுவம், ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதன் விபரம்: ஜம்மு - காஷ்மீர், எல்லையில், நுாற்றுக்கணக்கான பாக்., பயங்கரவாதிகள், இந்திய பகுதிக்குள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளனர். இவர்களின் ஊடுருவல் முயற்சிகள், கடந்த சில நாட்களாக, அதிகரித்துள்ளன. பாக்.,கின் எஸ்.எஸ்.ஜி., எனப்படும், சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 2,000 வீரர்களும், 90 ஆயிரம் ராணுவ வீரர்களும், எல்லையில் குவிந்து உள்ளனர்.

கண்காணிப்பு பணிஅதிக எண்ணிக்கையிலான ஆயுதங்களும் குவிக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு - காஷ்மீரில், ஒன்பது லட்சம் ராணுவ வீரர்களை, இந்திய தரப்பு குவித்துள்ளதாக, பாக்., கூறி வருகிறது. இந்தியா தரப்பில், 2.31 லட்சம் வீரர்கள், மட்டுமே, கண்காணிப்பு பணியில் உள்ளனர். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு பயங்கரவாதிகள் பலிஸ்ரீநகர் அருகே உள்ள, லாதாரா என்ற கிராமத்தில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே, நேற்று முன்தினம் இரவு நடந்த துப்பாக்கி சண்டையில், பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். பந்திப்போரா மாவட்டத்தில், நேற்று காலை நடந்த சண்டையில், மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

'மினி' பஸ் சேவை துவங்கியதுகாஷ்மீரின், ஸ்ரீநகர் பகுதியில், நேற்று முதல், 'மினி' பஸ்கள் இயங்க துவங்கின. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படாத பஸ் போக்குவரத்து, நேற்று முதல் துவங்கியது. மேலும், ஸ்ரீநகர் - பாராமுல்லா வழித்தடங்களில், இன்று முதல் ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. இதையடுத்து, நேற்று இரண்டு முறை, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. கார்கள், ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்து, வழக்கம் போல இயங்க துவங்கின. ஸ்ரீநகரின் பல பகுதிகளில், நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  பாகிஸ்தானுடன் போர் என்று வந்தால், பாகிஸ்தான் என்ற தேசம் உலக வரைபடத்தில் இருக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் அது உலகத்துக்கே பெரிய ஒரு உதவியாக இருக்கும்.

 • நக்கல் -

  இந்தியாவின் குறி இனி காஷ்மீராக இருக்கக்கூடாது, இஸ்லாமாபாத்தாக இருக்கவேண்டும்... அப்போதான் அடங்குவார்கள்..

 • Nallavan Nallavan - Dhanbad,இந்தியா

  சீனா தைரியம் கொடுத்திருக்கும் ...............

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இவனுங்களுக்கு வேற என்ன வேலை?....போயி பிச்சை எடுக்க வேண்டியது... கொஞ்சம் காசு கையில கிடைச்சா அத வச்சு வயிறு முட்ட தின்னுட்டு வந்து பிரச்சினை பண்றது..........தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் ராணுவ விழயத்தில் தலையிட கூடாதுன்னா பிரதமரை எப்பவும் பிசியா வச்சுக்கணும்....அதை தான் அந்த நாட்டு ராணுவம் செய்கிறது....ஏன்னா அந்த நாட்டுல மட்டும் தான் ராணுவம் 32 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது.... அதன் வருவாய் ராணுவ தலைமைகளால் சுரண்ட படுகிறது..... இதில் தலையிடும் அரசுகள் காலி......இதனால் தான் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஜெனரல்கள் அரபு நாடுகளில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவிக்க முடிகிறது மற்றும் ரெட்டை குடியிருமை வைத்து கொள்ள முடிகிறது............நம்ப ராணுவ அதிகாரிகள் பிள்ளைகளை தான் வெளி நாடுகளில் படிக்க வைக்க முடிகிறது.....சில பேர் சில பிளாட்களை வாங்கி போட்டு இருக்கிறார்கள்......

 • blocked user - blocked,மயோட்

  அடி வாங்காமல் விடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். கொடுத்து விடவேண்டியதுதான். தீவிரவாத நாட்டை முழுவதுமாக அழித்து விடுவது இந்தியாவுக்கு நல்லது.

Advertisement