Advertisement

அபிநந்தன் உருவ பொம்மை ; பாக்.,அட்டூழியம்

Share
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் விமானப்படை அருங்காட்சியகத்தில், இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டது போன்ற உருவ பொம்மையை, பாக்., அரசு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் அட்டூழியம் எல்லை மீறியுள்ளதற்கு, பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நம் விமானப் படையின், 'விங் கமாண்டர்' அபிநந்தன், பிப்ரவரியில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 'மிக் - 22' ரக விமானத்தில் சென்றார். எதிர்பாராத விதமாக இவரது விமானம் தாக்குதலுக்கு ஆளானது. அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவம் வசம் சிக்கினார். இரு தரப்பு பேச்சு மற்றும் சர்வதேச நாடுகளின் தலையீட்டின் அடிப்படையில், 54 மணி நேரத்துக்கு பின், நம் ராணுவத்திடம், அபிநந்தனை, பாக்., அரசு ஒப்படைத்தது.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான அன்வர் லோதி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், அபிநந்தன் இந்திய விமானப் படை சீருடையுடன் நிற்பது போலவும், அவரை, பாக்., ராணுவ வீரர் ஒருவர் சிறை பிடித்திருப்பது போலவும், இரண்டு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படத்தை வெளியிட்டு, அன்வர் லோதி கூறியுள்ளதாவது: கராச்சியில் உள்ள பாக்., விமானப் படை அருங்காட்சியகத்தில், அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டது போன்ற உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது; இது, பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.

ஆனால், அவர், 'டீ' குடிப்பது போன்ற பொம்மையை வைத்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார். அபிநந்தன், பாக்., ராணுவம் வசம் இருந்தபோது, அவர், டீ சாப்பிடுவது போலவும், அவரிடம் பாக்., ராணுவத்தினர் கேள்விகள் கேட்பது போலவும், ஒரு, 'வீடியோ'வை, பாகிஸ்தான் வெளியிட்டிருந்தது. இதை குறிப்பிட்டு கிண்டலடிக்கும் வகையில் தான், லோதி, அந்த கருத்தை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பாகிஸ்தான் அரசின், இந்த எல்லை மீறிய அட்டூழியத்துக்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • Prasanna Krishnan -

  adakki vaasi.

 • ஸாயிப்ரியா -

  பட்ட காயம் புரையோடி விட்டது. அதான் அபிநந்தன் அருந்திய Tea cup ஐ வைத்து புலம்பினார்கள். இப் பொம்மையை வைத்து வெறுப்பேற்றுவதாக நினைத்து மகிழ்கிறார்கள்.

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  திரையுலகில் கோட்டு சூட்டு போட்டு கொண்டு வளம் வரும் பல ஜாம்பவான்கள் ஏற்கனவே இவரை கெடுத்து விட்டதால், இனியும் கெட்டுப்போக ஒன்றுமில்லை என்று இவர் இப்படி கூறலாம் .

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  இவர் பாகிஸ்தானின் உயர் ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதையும், அதிலிருந்து குதித்த பாகிஸ்தானி வீரர்களை அந்நாட்டு குடிமக்களே கல்லால் அடித்து கொன்றதையும் இந்திய விமானப்படை கண்காட்சியி வைக்க வேண்டியதுதானே ?.

 • Balaji - Khaithan,குவைத்

  உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக மூன்று நாட்களுக்கு மிகாமல் இந்தியாவிடம் ஒப்படைத்ததே இவர்களின் மிகப்பெரிய தோல்வி... எல்லை தாண்டி தாக்குதல் நடத்திவிட்டு 3 ஒன்னும் செய்ய முடியாமல் எங்கள் மாவீரனை அனுப்பியதே இவர்களின் தோல்வியை காட்டுகிறது.. இதில் இதுபோன்று குசும்பு வேறு ஒரு கேடா.. இதற்கு இவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்.. இதையே வீரம் போல எண்ணுவது அறிவீனம்...

Advertisement