இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், தஞ்சைக்கு வந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர், 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'முரசொலி பத்திரிகை அலுவலகம் கட்ட, பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நிரூபித்தால், தான் அரசியலில் விலகிக் கொள்கிறேன்' என, சவால் விடுத்தார். ஆனால், அந்த சவாலை ராமதாஸ் ஏற்கவில்லை. பா.ம.க., கொஞ்சம் கொஞ்சமாக கரைகிறது. தன் கட்சியை தக்க வைக்க, ராமதாஸ், இது போன்ற அவதுாறுகளை பரப்பி வருகிறார்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க., கூட்டணியை விட்டு விலகாத, இந்திய கம்யூ., மாநில செயலராக இருந்த பாண்டியன் முன், 'மூச்' காட்டாத முத்தரசன், இப்ப, ஸ்டாலினுக்கு ஆதரவா பேசுறது, ஆச்சரியமாக தெரியலை...?' என, 'கமென்ட்' அடிக்க, அதை ஆமோதித்த, மற்ற நிருபர்களும் தலையசைத்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!