Advertisement

திருமணத்தில் இணைந்தஇரு மனம்

Share
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க வந்த இரண்டு மாற்று திறனாளிகள் ஒரு சில நிமிடங்களிலேயே மனம் ஒத்துபோக அவர்கள் திருமணம் செய்தது ஆச்சரிச்சயத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பகுடி பகுதியில் முத்துகருப்பையா திருமண மண்டபத்தில் ஒரு திருமணம் நடந்தது. அந்த விழாவில் பிலாவிடுதியை சேர்ந்த வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி ராமராஜன்(30) என்பவரும் நாகப்பட்டினத்தை சேர்ந்த மாற்றுதிறனாளி தேவி(27) என்பவரும் நேற்று மதியம் திருமண மண்டபத்தில், எதார்த்தமாக சந்தித்தனர். இருவரும் அவர்களது பாசை, ( சைகையில் ) பேசிக்கொண்டனர். பின்னர் இருவரும் மனம் ஒன்று சேர்ந்து திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
இந்த விஷயம் உறவினர்களுக்கு தெரிய வந்தது. உடனடியாக பேசி முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இவர்களின் திருமணம் கறம்பகுடி முருகன் கோவிலில் இனிதே நடந்தது. இந்த திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பலர் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்ட திருமணம் இது தான் என கூறி மணமக்களை வாழ்த்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (33)

  • a.s.jayachandran - chidambaram,இந்தியா

    நூறாண்டு காலம் வாழ்க

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    இறைவன் அருளால் நல்லபடியாக இருப்பார்கள் வாழ்க வளமுடன்

  • Kannan - Ramanathapuram,இந்தியா

    வாழ்க மணமக்கள் பல்லாண்டு.

  • Ganapathy - Bangalore,இந்தியா

    வாழ்த்துக்கள் -

  • Vaanjinathan - Bangalore,இந்தியா

    எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க. முருகன் அருளால் உங்கள் இல்லறம் நல்லறமாக அமையும்..

Advertisement