Advertisement

ஜாதி, மதமற்ற சேலம் இளைஞர்

Share
சேலம் : சேலத்தைச் சேர்ந்த இளைஞர், 'ஜாதி, மதம் அற்றவர்' என, வருவாய்த் துறையில் சான்றிதழ் பெற்றுள்ளார்.

சேலம் மாவட்டம், தலைவாசல், சிறுவாச்சூரைச் சேர்ந்தவர், கார்த்திக், 28; பட்டதாரியான இவர், சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். விடுமுறையால், கடந்த மாதம், 14ல், சொந்த ஊர் வந்தார். தன், ஜாதிச் சான்றிதழை, வருவாய்த் துறையிடம் ஒப்படைத்து, 'இடஒதுக்கீடு சலுகை தேவையில்லை' என, எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து அவருக்கு, 'ஜாதி, மதம் அற்றவர்' என, வருவாய்த் துறை சான்றிதழ் அளித்தது.

இதுகுறித்து, கார்த்திக் கூறியதாவது: ஜாதி, மதம் ஆகியவை, சமூகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரிய பாதிப்புகளை ஏற்படுகின்றன. இந்நிலையில், வேலுார் மாவட்டம், திருப்பத்துாரைச் சேர்ந்த, வழக்கறிஞர் சினேகா, 'ஜாதி - மதம் அற்றவர்' என, சான்றிதழ் பெற்றுள்ளதை, செய்திகள் மூலம் அறிந்தேன். அதில் ஏற்பட்ட ஆர்வத்தால், சிங்கப்பூரிலிருந்து வந்தது முதல், அதற்கான பணியில், 25 நாட்கள் ஈடுபட்டேன்.

இதுகுறித்து, சிறுவாச்சூர், வி.ஏ.ஓ., தலைவாசல் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர், நிறைய கேள்விகள் கேட்டனர். விசாரணைக்கு பின், 'ஜாதி, மதம் அற்றவர்' என, ஆத்துார் தாசில்தார் மூலம், வருவாய்த் துறை சான்றிதழ் வழங்கியது. இது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இதையடுத்து, பள்ளி, கல்லுாரி, மற்ற இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, என் ஜாதி, மதம் உள்ளிட்ட தகவல்களை, இச்சான்றிதழ் மூலம் மாற்றும் பணியில் ஈடுபட உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • LAX - Trichy,இந்தியா

  படிப்பு சான்றிதழ்களில் ஒன்றுமில்லை.. வேலை தெரிந்திருக்க வேண்டும்.. என்பது போலத்தான்.. இதுவும்.. ஜாதி/மத சான்றிதழ்களைத் திருத்திவிட்டால்/ நீக்கிவிட்டால் போதாது நிஜத்தில் ஜாதி/மத/பொருளாதார ஏற்றத் தாழ்வு இன்றி பழகுகிறோமா என்பதில்தான் உண்மையான சமத்துவம் உள்ளது.. இங்கு சொல்லப்பட்டுள்ள கருத்துப்படி, இந்துக்கள் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கினால்.. தீர விசாரிக்கப்பட வேண்டிய விஷயம் தான்.. (இந்த நபருக்கு இப்படியொரு சான்றிதழை வழங்கும் முன்னர், வருவாய்த்துறையும் அந்த விசாரணையைத் தான் நடத்தியிருக்கும் என நினைக்கிறேன்..

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  சாதி இல்லாதவர் என்று யாருமே இருக்க முடியாது. சாதி & மதம் பெற்றோர் அடையாளத்தால் வந்தது. பெற்றோர் யாரென அறிய இயலாமல் அனாதை ஆக்கப்பட்டோர் சாதி & மதம் அறியவியலாதோர் என குறிப்பு ஏற்கலாம். கார்த்திக்கைப் பொருத்தவரை அவர் சா & ம துறந்தவர் என்று சான்றளிப்பதே சரியான முறையாக இருக்கும். இல்லாதவர் என்ற சான்று ஒரு மோசடி.

 • மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா

  மதம், என்று உண்மையில் இந்தியாவில் ஒன்றும் இல்லை வந்தவர்கள் தங்கள் சுய லபத்திற்காக சூட்டியதே அது. ஜாதி சற்று விளக்கமாக பார்க்க வேண்டியது. அக்காலத்தில் ஜாதி இன்றைய நிறுவனங்களில் உள்ள பதவிகளுக்கு சமமானது.அவர் அவர் தொழில் முறையில் ஏற்படுத்தப்பட்டது தான் ஜாதி. ஒரு நிறுவனத்தில் ஒரே பதவியில் எல்லோரும் இருக்க முடியாதோ அது போல் தான் ஒரு சமூகத்தில் இந்த ஜாதிய அமைப்பு இருந்து வந்துள்ளது. மேலும் தகுதி வாய்ந்த மேலாளருக்கு கட்டுப்பட்டு தொழிலாளிகள் வேலை பார்த்தக வேண்டும் அப்போது தான் நிறுவனம் வளரும். சம்பளம் தருவதால் இந்த முறையை இன்று கூட யாரும் எதிர்பதில்லை. சரி, ஒரு பதவியில் இருந்து இன்னொரு பதவிக்கு உயர்வு பெற்றுச்செல்ல முடியுமா ஆம் சூத்திரனும், சத்ரியனும் பிராமணன் செய்ததை நல் ஒழுக்கத்தின் மூலம் செய்ய முடியும், பிரமணனும் பிறர் செய்வதை ஒழுக்கம் கெட்டு செய்ய முடியும்.இதற்கு நமது புராண இலக்கியங்களில் பல கதைகள் உள்ளது. ஆனால் தவறு எங்கே நடந்தது? பல நிறுவன மேலாளர்கள் அதிகார போதையில் தானும் ஒரு வேலைகாரன் தான் என்பதை மறந்து தனது அதிகார மமதயில் செய்ததே இந்த ஜாதீய ஏற்ற தாழ்வு. உண்மையில் பாகுபாடின்றி இருக்க நினைத்தால் இன்றைக்கிருக்கும் எந்த மனித சமூக கட்டமைப்பிலும் அதற்கு வாய்ப்பில்லை. கானகம் தான் செல்ல வேண்டும்.அங்கும் மனிதன் விலங்கு என்று பேச்சு வரும். அரசியல் தலைவன்-தொண்டன் கூட மேல்-கீழ் தானே? சமத்துவம் மனிதாபத்தினால் மட்டும் தான் வரும். சமூக கட்டமைபின் அஸ்திவாரமாக உள்ள தொழிற் பிரிவுகளை மட்டும் நீக்குவதால் அல்ல.

 • Asagh busagh - Munich,ஜெர்மனி

  அய்யய்யோ இப்படியெல்லாம் செஞ்சு குருமா, சுடலை கான், மருத்துவர் வயித்துல புளிய காரைக்காதீக. உங்கள மற்றவர்களுக்கும் பின்தொடர்ந்தா அவனுங்க புலப்பு சிரியா சிரிச்சு போயிரும்.

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  வெளி நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு ஜாதி சான்றிதழ் தேவை அற்றது.

Advertisement