Advertisement

அசராத அய்யாக்கண்ணு...


விழுப்புரம் மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் அய்யாக்கண்ணு.எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஐந்து வயதி்ல் ஏற்பட்ட போலியோ நோய் தாக்குதல் காரணமாக கால் ஊனமானது.
ஒரு மாற்றுத்திறனாளி மாணவராக வளர்ந்த அய்யாக்கண்ணுவின் வீட்டின் பொருளாதார சூழல் அவரை பிளஸ் டூ விற்குமேல் படிக்கவிடவில்லை.
சக மாற்றுத்திறனாளிகளின் உதவியுடன் நாற்காலிகளுக்கு வயர் பின்னுதல் தொழில் செய்து வீட்டின் சுமையை பகிர்ந்து கொண்டார்.வந்த வருமானத்தில் சிறிது சிறிதாக மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு சென்றார் கிராபிக்ஸ் டிசைனராக உருவெடுத்தார்.
ஆனாலும் பிரயோசனமி்ல்லை ஒவியரை வீட்டிற்கு வெள்ளை அடிக்க கூப்பிட்டது போல புத்தக வடிவமைப்பு போன்ற பெரிய வேலைகளுக்கான கிராபிக்ஸ் செய்ய படித்தவருக்கு அரசியல், சினிமா, திருமணங்களுக்கு பிளக்ஸ் பேனர் டிசைன் செய்யும் வேலைதான் கிடைத்தது, வேலைக்கேற்ற சம்பளமும் கிடைக்கவில்லை.
இனி் வேலை பார்ப்பது இல்லை சுயமாக சம்பாதித்து நாலு பேருக்கு நாம வேலை கொடு்க்குமளவிற்கு முன்னேற வேண்டும் என்று எண்ணினார்.
அதற்காக தமிழக மாற்றுத்திறனாளி கூட்டமைப்பின் மாநில தலைவரான சிம்மசந்திரனை அணுகினார் அவரது முயற்சி காரணமாக ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் கிடைத்தது.
உரிமம் கிடைத்தது என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டேன் ஆனால் அதற்காக அவர் இரண்டு மாத காலம் அசராமல் அலைந்திருக்கிறார்.
உரிமம் கிடைத்தது சரி ஆனால் பொருட்கள் விற்க கடை வேண்டுமே ‛யுனைடெட் வே' என்று சர்வதேச நிறுவனத்தின் சென்னை அமைப்பினரை அணுக அவர்கள் அய்யாக்கண்ணுவி்ன் உழைத்து முன்னேற நினைக்கும் உறுதியை பாராட்டும் விதமாக ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் ஆவின் பூத்தை நன்கொடையாகவே அமைத்து கொடுத்தனர்.
உரிமம் கிடைத்து விட்டது அதை விற்க ஆவின் பூத்தும் ரெடி ஆனால் ஆவின் பூத்தை வைப்பதற்கு இடம் வேண்டுமே அடுத்த தேடுதலில் சென்னை கிண்டியில் உள்ள மகளிர் தொழில் பயிற்சி மைய வளாகத்திலேயே இடமும் கிடைத்துவிட்டது.
சுபயோக சுபவேளையில் அய்யாக்கண்ணு தனது மாற்றுத்திறனாளி மனைவியான வைரத்துடன் கடையை திறந்தார் இவர்களது முயற்சி பலன் தரட்டும் என்று வாழ்த்தி பத்திரபதிவு துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.
மாற்றுத்திறனாளி கூட்டமைப்பினர் பலரும் வந்திருந்து வாழ்த்தினர் அவர்கள் வாழ்த்தோடு அய்யாக்கண்ணுவிற்கு உங்கள் வாழ்த்தும் சேரட்டும் அவரது எண்:9626923335.
-எல்.முருகராஜ்
murugarajdinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    வாழ்த்துகள் ப்ரோ ...

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    வாழ்த்துக்கள் அய்யாக்கண்ணு அவர்களே

Advertisement