Advertisement

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு

புதுடில்லி: நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் நாளை (நவ.,9) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்திற்கு 3 அமைப்புகள் உரிமை கொண்டாடிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், நாளை (நவ.,9) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீர்ப்பையொட்டி, உ.பி.,யில் தற்காலிக சிறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உ.பி.,யில் கொண்டாட்டங்கள் மற்றும் துக்கம் அனுசரிக்கக் தடை விதிக்கப்பட்டுள்ளது. அயோத்தி மற்றும் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அலர்ட்டாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை கேட்டு கொண்டுள்ளது.

உ .பி.,யில் பள்ளிகள் மூடல்





தீர்ப்பை முன்னிட்டு உ .பி.,முழுவதும் பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும். அயோத்தியில் 4 ஆயிரம் துணை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

தமிழகத்தில் மட்டும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

பிரதமர் வேண்டுகோள்



தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி தோல்வி என கருதாமல் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் காக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

  • Ram - chennai,இந்தியா

    Hopefully , the 2010 Allahabad high court judgment, which said the disputed 22.7 acres should be equally divided among the Sunni Waqf Board, the Nirmohi Akhara and Ram Lalla. வாழ்க பாரதம் , வாழ்க பாரத மக்கள்

  • C.Elumalai - Chennai,இந்தியா

    இந்தியா மக்கள்,தீர்ப்பு எப்படியிருப்பினும்,அமைதியை,விரும்புவர்கள்.ஜெய்ஹிந்த்.

  • மும்பை நாநா -

    அமைதி மற்றும் சன்மார்க்கத்தை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு ‌இந்தியா. நாளை அதை மீண்டும் நிரூபிப்போம்

  • அருண் பிரகாஷ், சென்னை -

    பாபரை ஆதரிக்கும் நோக்கோடு ராமபிரான் ரதத்தை தடுக்கும் உண்மையான ஹிந்து விரோதிகள் உள்ள இடம் தமிழ்நாடு.தீர்ப்பு அவர்களின் எண்ணம் தவறு என்று நிரூபிக்கும் விதமாக இருந்தால் நல்லது.ஜெய் ஸ்ரீராம் என்று கூறினால் தவறு என்று காளி மண்ணில் ஆட்டம் போடும் கயவர்கள் உள்ள நாடு இது.அவர்களுக்கும் ஒரு பாடம் கிடைத்தால் நல்லது.ஜெய் ஸ்ரீராம்..ஜெய் ஜெய் ஸ்ரீராம்..

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    தமிழக ஊடகங்கள் இதை வைத்து ஒரு மாதத்திற்கு வண்டி ஓட்ட முடியும். பாஜக, திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என்று எல்லா கட்சிக்காரர்களும் ஒருவரோடு ஒருவர் மோதி, அதை பற்றி ஏதாவது கட்டுரையோ, பேச்சோ நடந்து அதனால் மேலும் பிரச்சினைகள் கிளம்பி, கடைசியில் இது யாருக்கு ஓட்டாகப் போய் முடியுமோ என்பதுதான் முக்கியமாகும்.

Advertisement