Advertisement

கழிவறையில் வழுக்கி விழக்கூடாது விஜய்: கோர்ட்

சென்னை: துப்பாக்கிச்சூட்டில் கைது செய்யப்பட்டுள்ள மாணவரை 3 நாள் காவலில் எடுக்க அனுமதி அளித்துள்ள கோர்ட், அவர் கழிவறையில் வழுக்கி விழாமல் போலீசார் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூர் அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முகேசை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அவரது நண்பர் விஜய் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், விஜயை நவ.,14 வரை(3 நாள்) காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் விஜய் கழிவறையில் வழுக்கி விழாமல், பார்த்துக் கொள்ளும்படி, போலீசாருக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.
சமீப காலமாக கைது செய்யப்படும் குற்றவாளிகள் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படும் போது பலத்த காயங்களுடன் காணப்படுவர். இது போலீசாரின் தனி " கவனிப்பாக" இருக்கும். இதற்கு வழுக்கி விழுந்தததாக காரணம் கூறப்படும். இந்நிலையில் கோர்ட் மறைமுகமாக சாடியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (45)

  • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

    இந்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர் மீது மிகவும் கருணையுடன் இருப்பதாக தெரிகிறது . இதே கருணையை மற்ற குற்றவாளிகளுக்கும் காட்ட வேண்டும்

  • Jayvee - chennai,இந்தியா

    பேசாமல் நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒருவரை வைத்தே இது போன்ற குற்றவாளிகளை விசாரிக்க சொல்ல வேண்டியதுதான்.. திருடனும் (இங்கு கொலை குற்றவாளி) safe போலீசும் safe

  • புரோகிதர் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா

    கோல்டன் கிலோப் அல்லது யுவ வீர புரஸ்கார் போன்று ஏதேனும் விருதுக்கு சிபாரிசு செய்யலாமே?

  • L.N.Ramesh - madurai,இந்தியா

    இவன்தான் சும்மா சுட்டேன் அவன் செத்துவிட்டான் என்று சொல்கிறானே.அவனிடம் என்ன விசாரணை வேண்டி இருக்கு.நீட்டி பத்தி இதற்கு பதிலாக அந்த பையனிடம் எனக்கு துப்பாக்கி சுடத்தெரியது நானும் துப்பாக்கியால் உன்னை சுட்டுப்பார்க்கிறேன்.நீசகவில்லை யானால் உன்னை போலீசார் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளச்சொல்கிறேன் என்று சொல்லியிருக்கலாம்.கைப்புண்ணுக்கு கண்ணாடி.இதுதான் இன்றைய சட்டம்.இல்லாததை கண்டுபிடிக்காது.

  • Vivekanandan Mahalingam - chennai,இந்தியா

    தமிழ் நாட்டில் கடந்த 2 வருடமாக (அதாவது திரு விஸ்வநாதன் போன்றவர்கள் பொறுப்பு ஏற்றபின்பு) குற்றம் குறைந்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் குற்றவாளிகளை போலீஸ் நன்றாக கவனிப்பது தான். இது தான் சிறந்த முறை. நீதிபதிகள் வழக்கை தவிர வேறு சில அறிவுரைகள் கொடுப்பது முறையாக தெரியவில்லை

Advertisement