Advertisement

ஓய்வின்றி பாதுகாத்தவர்களுக்கு நன்றி: ராகுல் டுவிட்

புதுடில்லி: 'என்னையும், என் குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்.பி.ஜி., சகோதரர்களுக்கு நன்றி' என காங்., எம்.பி., ராகுல், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

காங்., தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் சோனியாவின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த, நாட்டின் உயரிய சிறப்பு பாதுகாப்பு குழுவினரான, எஸ்.பி.ஜி., (Special Protection Group) பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து சோனியாவின் குடும்பத்துக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் காங்., எம்.பி., ராகுல் பதிவிட்ட டுவிட்டர் பதிவு: என்னையும், எனது குடும்பத்தாரையும், ஓய்வின்றி பாதுகாத்த எஸ்.பி.ஜி., சகோதர சகோதரிகளுக்கு நன்றி. உங்களின் அர்ப்பணிப்பு, நிலையான ஆதரவு, பாசம் நிறைந்த பயணத்திற்கு நன்றி. உங்கள் எதிர்காலம் சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (26)

  • ஆப்பு -

    அயோத்தியா வழக்கு தீர்ப்பு வரும் முன் அதைப்பத்தி சொல்ல வாயே வரலியே.... நீங்கள்ளாம் எப்போ ஆல் இந்தியா தலைவரா வரப்போறீங்களோ?

  • பேசும் தமிழன் -

    பப்பு கான் அவர்களே நீங்கள் அவர்களை மதித்ததாக தெரியவில்லையே .....சொல்லாமல் கொள்ளாமல் ....வெளிநாட்டிற்கு போனதால் தான் உங்கள் பாதுகாப்பை அரசு விலக்கி கொண்டது .....அப்படி அவர்களுக்கும் தெரியாமல் அப்படி என்ன வேலை வெளிநாட்டில் இருக்கு என்பது தான் நாட்டு மக்களின் சந்தேகம்

  • Ram - Panavai,இந்தியா

    மேன்மக்கள் மேன்மக்களே

    • சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா

      யாரு ? இவனுங்களா...? லஞ்சம், ஊழல், நில அபகரிப்பு எல்லாவற்றிலும் மேன்மக்கள்.

  • சமத்துவம் - Chennai,இந்தியா

    இவர் பெரிய இம்ரான் கான், எதுன்னாலும் ட்விட்டர்ல தான் பேசுவாரு.

  • Viswam - Mumbai,இந்தியா

    எப்போதும் போல உளறாம, இந்த தடவை எதோ உணர்ச்சி வசப்பட்டு நன்றி சொல்லற பாவனைலே, ஐயோ எனக்கு கிடைச்ச செக்யூரிட்டி கவரை எடுத்துட்டாங்களேன்னு புலம்பறாரு. காங்கிரஸ் அபிமானிகள் நன்றி விளம்பலை பார்த்து கண்கள் குளமாக உணச்சிவசப்பட்டு அன்னாரின் மேன்மக்கள் நினைப்பை அறிந்து சிறப்பு பாதுகாப்புக்கு வெள்ளை பச்சை முறையில் பிரார்த்தனை செய்யவும்

Advertisement