Advertisement

ஸ்டாலினுக்கு அல்வா தந்த மக்கள்: இபிஎஸ்

Share
விக்கிரவாண்டி: இடைத்தேர்தலில் தோல்வியை பரிசளித்து, ஸ்டாலினுக்கு மக்கள் மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்றதற்காக நடந்த நன்றி அறிவிப்புக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும், அ.தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும். பலம் பொருந்திய அ.தி.மு.க., கூட்டணியிடம் யாரும் நெருங்க முடியாது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள், ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர். உள்ளாட்சி, 2021 சட்டசபை தேர்தலுக்கு, இடைத்தேர்தல் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல், போராட்டங்களை ஸ்டாலின் தூண்டிவிடுகிறார். ஸ்டாலினின் எண்ணங்கள் அனைத்தும், இடைத்தேர்தல் மூலம் நிராசை ஆகி உள்ளன.

தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை, இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது. போக்குவரத்துத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் மத்திய அரசின் விருதை தமிழகம் வென்றுள்ளது. மேலும், கல்வித்துறையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மத்திய அரசின் விருதுகளை தமிழகம் வென்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    அதன்விளைவு வெளிப்படுவதும் இயல்பாகத்தானே இருக்கமுடியும்

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    இடை தேர்தலில் ஏற்கனவே RK நகரில் அல்வா கொடுத்தவர்கள் தான், பிறகு நடந்த பொது தேர்தலில் சரியான தீர்ப்பை வழங்கினார்கள். இடை தேர்தல் எப்படி நடக்கும் என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். வெற்றிடத்தை பூர்த்தி செய்ய வேண்டுமானால் நிமிர்ந்து நிற்கவேண்டும். குனிபவர்களை அவமான சின்னமாக வீர தமிழர்கள் எண்ணுவார்கள்.

  • PANDA PANDI - Aththipatti,இந்தியா

    ஸ்டாலினுக்கு 2 அல்வா. உங்களுக்கு 39 அல்வா. ok

Advertisement