Advertisement

டிக்டாக்கில் மூழ்கிய மனைவி: பூரிக்கட்டையால் அடித்து கொன்ற கணவன்

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

பிரகாசம்: ஆந்திரா மாநிலத்தில் டிக்டாக்கில் மூழ்கிய மனைவியை பூரிக்கட்டையால் அடித்து கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீ பகாலமாக பலரும் தங்களின் இயல்பு வாழ்க்கையை மறந்து சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ளனர். இது அவர்களுக்கும் அவர்களை சார்ந்த மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் அந்த மாயையில் சிக்குகின்றனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் டிக்டாக் செயலியால் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தல்லூர் கிராமத்தை சேர்ந்த பாச்சூ, டெய்லராக உள்ளார். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும் பள்ளி செல்லும் வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.
பாத்திமாவுக்கு டிக்டாக்கில் வீடியோ வெளியிடும் பழக்கம் இருந்து வந்தது. வீட்டிற்கு அருகில் உள்ள வயல்வெளி, தோட்டம் என பல்வேறு இடங்களுக்கு சென்று, நடனமாடி வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதனை பலமுறை பாச்சூ கண்டித்தும், பாத்திமா கேட்கவில்லை.
ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த பூரிக்கட்டையால் அடித்தும், கழுத்தை நெரித்தும் மனைவியை கொன்றுள்ளார். மாட்டிக் கொள்வோம் எனக் கருதி, மனைவியை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்தது போல் நாடகமாடினார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டார். பாச்சூ கைது செய்யப்பட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (19)

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    நல்ல மனிதனையும் கொலைகாரனாக்கும் நம் ஸ்மார்ட் போன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    எதுவுமே அளவுக்குமீறினால் எண்டிங் தான் நிஸ்ச்சயம் என்னகண்றாவியோ டிக்ட்டாக அதுஇதுன்னு இன்னிவரை எனக்கு இந்த கைபேசி இயக்கவே தெரியாது அதனால் ஒன்னும் குறையே இல்லீங்க நிம்மதியாயிருக்கேன் என்னைப் பொறுத்தவரை இது ஒரு குப்பை நாசமாப்போறதுக்கு தான் வழி நிமிஷமே அவ செத்துட்டா அதுவும் பூரிக்கட்டையால் அடிச்சுக்கொலை செய்துருக்கானே அவனையும் இதுபோலவே பூரிக்கட்டையால் அடிக்கவேண்டும் அப்போதான் தெரியும் வழியும் வேதனையும் நாசமாப்போக இந்த பண்ணி ஜாலியா ஓசில சிறையிலே சோறுதுன்னுண்டு தீர்ப்புவரை காலம் கழிப்பான் மனைவி என்றால் கணவன்களுக்கெல்லாம் அவ கொத்தடிமையா

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    டிக் டாக் குடும்பப்பெண்களுக்கானது அல்ல .. விளைவு இதுபோன்ற நிலைகளை ஒருக்காலும் தவிர்க்கவே முடியாது .. குற்றங்கள் பரவ டிக் டாக் . குடும்பம் குதர்க்கமாக அமைய டிக் டாக் . நாச விளைவுகள் ஏற்படுத்தும் டிக் டாக் ..

  • Suresh Periyasamy - Kovilpatti,இந்தியா

    இது அதிகரிக்கும் என எதிர்பாக்கிறேன்

  • oce - kadappa,இந்தியா

    ஆண்களுக்கு டாஸ்மாக். பெண்களுக்கு டிக்டாக்.

Advertisement