Advertisement

ஆப்பிளை வீழ்த்திய ஆண்ட்ராய்டு

Share
நியூயார்க்: ஸ்மார்ட் போன்களுக்கான பல்வேறு ஆய்வுகளில் முன்னணி தொலைபேசியான ஐபோனை வீழ்த்தி ஆண்ட்ராய்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

DXOMark எனப்படும் ஸ்மார்ட்போன் டிஜிட்டல் கேமரா மதிப்பாய்வு நிறுவனம் சார்பில், ஐபோன்களின் ஐ.ஓ.எஸ்., கொண்ட போன்களுக்கும், ஆண்ட்ராய்டு செயலியை கொண்ட போன்களுக்கும் இடையேயான மதிப்பிடுதலை நடத்தியது.
அதில், உலகின் சிறந்த கேமரா கொண்டதாக கருதப்படும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என்ற போன் 117 மதிப்பெண்களை பெற்றது. ஆனால், இதைவிட ஆண்ட்ராய்டு செயலியுடன் இயங்கும் ஹவாய் மேட் 30 ப்ரோ மற்றும் சியோமி மி எக்ஸ்.எக்ஸ்., 9 ப்ரோ பிரீமியம் மொபைல்கள் 121 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
கேமராவில் ஒரு காட்சியை பெரிதுப்படுத்தி பார்க்க ஜூம் செய்யும் திறனில் ஐபோனும், ஆண்ட்ராய்டும், 2 மடங்கு வரையிலான ஜூம் திறனில் சிறப்பாக இருப்பதாகவும், 5 மடங்கு ஆப்டிக்கல் ஜூம் திறனில் ஹவாய் போனை காட்டிலும் ஐபோன் பின்தங்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
வீடியோ ரெக்கார்டிங்கில் எச்.டி.ஆர் டைனமிக் வரம்பில், ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மற்றும் சியோமி மி சிசி9 போன்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்விரண்டும் 102 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா

    வேடிக்கை... காமிராவின் திறனுக்கும், இயங்குதளம் வடிவமைக்கப்படுவதிலும் நேரடித் தொடர்பு இல்லை ......

  • blocked user - blocked,மயோட்

    LEICA உலகின் முன்னணி ஜெர்மன் லென்ஸ் உற்பத்தியாளர் (உதாரணத்துக்கு 0.95X அப்பர்சார் உள்ள ஒரு M லென்ஸ் US$11600). அதை யார் உபயோகித்தாலும் சிறப்பாகவே படம் வரும். ஹுவாவை முன்னால் வர அதுதான் காரணம். மற்றோன்று ஏராளமான மெகா பிக்சலை வைத்து 117 வாங்கி இருக்கிறார்கள். ஆப்பிள் iPhone கிங்...

Advertisement