dinamalar telegram
Advertisement

பா.ஜ., சிவசேனா ஆட்சி: சரத்பவார் உறுதி

Share

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா ஆட்சி அமைக்க தான் மக்கள் உறுதி அளித்துள்ளனர். இதனால், அக்கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், பா.ஜ., நிர்வாகிகள் நேற்று (நவ.,07) கவர்னரை சந்தித்து பேசினர். அதே சமயம் சிவசேனாவும் தனது எம்எல்ஏ.,க்களை தனியார் ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியது. ஆட்சி அமைக்க கால அவகாசம் இன்றுடன் முடியும் நிலையில், இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

சந்திப்புஇதன் இடையே, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். அப்போது, மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து பேசியதாக தெரிவித்தார்.

பொருளாதாரம் பாதிப்புஇதன் பின்னர் சரத்பவார் கூறுகையில், மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வும் சிவசேனாவும் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர். அவர்கள் ஆட்சி அமைக்க வேண்டும். இதனை தான் நானும், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வேலேயும் ஆலோசனை நடத்தி ஏற்று கொண்டோம். மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாநிலத்தின் பொருளாதார நிலையை பாதித்துள்ளது.முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. இது தொடர்பாக சரத்பவார், டில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆனால், தனது சரத்பவார் திடீரென முடிவை மாற்றி கொண்டு, மாநிலத்தில் எதிர்க்கட்சியாக தான் செயல்படுவோம் எனக்கூறினார்.

காங்., உறுதிசிவசேனா, காங்., உள்ளிட்ட கட்சி எம்எல்ஏ.,க்களை பாஜ., இழுக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது.
இது குறித்து காங்., மூத்த தலைவர் ஹூசைன் தல்வாய் கூறியதாவது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். கட்சி மேலிடத்தின் கட்டளையை பின்பற்றுவதால் எங்கள் கட்சியினர் விலகி செல்லமாட்டார்கள். மஹாராஷ்டிராவில் பாஜ., ஆட்சி அமைக்க விடமாட்டோம். மாநிலத்தை காப்பாற்றவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

பாஜ.,வால் எங்கள் எம்எல்ஏ.,க்களை இழுக்கவே முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன். தேர்தலுக்கு முன் விலகி சென்றவர்களும் மீண்டும் வந்து இணைய இருக்கிறார்கள். காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகள் பாஜ., தலைமையை ஏற்க மாட்டோம் என ஏற்கனவே கூறியுள்ளோம். இவ்வாறு ஹூசைன் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • mindum vasantham - madurai,இந்தியா

  இந்த வோட்டு எல்லாம் பிஜேபி க்கு விழுந்த வோட்டு

 • Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா

  ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க ஆசைப்படுகிறார் .....

 • Kandaswamy - Coimbatore,இந்தியா

  அடே பவாரு, திருடனுக்கு தேள் கொட்டுனது போல இருக்கா??? இப்படியே இன்னும் 5 வருஷம் ஓட்டிக்கோ. அடுத்த டார்கெட் நீதான். 5 ஏக்கர் நிலத்துல 150 கோடி லாபம்ன்னு சொன்னாலே உன் மகள் அது எப்படின்னு விசாரிக்க உனக்கு அப்பன் இன்கம் டாக்ஸ் காரன் நிப்பான்.

 • vnatarajan - chennai,இந்தியா

  மாநிலத்தை காப்பாற்ற மக்கள் காங்கிரஸிற்கு வாக்களித்து உள்ளார்களாம். அப்படீன்னா நீங்க கவர்னரைபோய் சந்திக்கவேண்டியதுதானே. அதைவிட்டுவிட்டு வீறாப்பா பேசுகிறாரே. தேசியவாத காங்கிரஸின் தலைவர் எங்களுக்கு மக்கள் ஆச்சி செய்ய வோட்டளிக்கவில்லை ஆகையால் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில்தான் உட்காருவோம் என்று கூறியிருக்காரே. அதாற்கு ஹுசைன் தளவாய் என்ன பதில் சொல்லப்போகிறார்.

 • NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம் - Vadodara,இந்தியா

  //மாநிலத்தை காப்பாற்றவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்// ஹா ஹா ஹா. என்ன ஒரு காமெடி. அப்படி உங்களுக்கு வாக்களித்திருந்தால் நீங்களல்லவா இன்று ஆட்சி பீடத்தில் இருந்திருப்பீர்கள். எதிர்க்கட்சியாக இருந்த உங்களை நான்காவது இடத்திற்கு தள்ளியதுதான் மக்கள் உங்களுக்கு வாக்களித்ததா. ஆனாலும், எப்படி அடிகொடுத்தாலும் அதை துடைத்துக்கொண்டு அசராமல் இதுபோன்ற வசனங்களை பேச கான்க்ராஸ் கட்சி ஆட்களால் மட்டுமே முடியும்.

Advertisement