Advertisement

எனக்கு காவி பூச முயற்சி: ரஜினி

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பதாகவும், இதில் சிக்க மாட்டேன் எனவும் நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

சென்னையில் கமலின் ராஜ்கமல் அலுவலகத்தில் பாலசந்தர் சிலை திறப்பு விழாவிற்கு பின்னர், தனது வீட்டில் நடிகர் ரஜினி நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளுவர் மிகப்பெரிய ஞானி. சித்தர். ஞானிகள், சித்தர்களை மதம் ஜாதி எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியாது.அதற்கு அப்பாற்பட்டவர்கள். திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவரது குறள் மூலம் தெரியும். அவர் நாத்திகர் அல்ல. ஆத்திகர்.

இதை யாரும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது. திருவள்ளுவருக்கு பா.ஜ., காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விஷயம். ஊரில் நிறைய பிரச்னை இருக்கும் போது, இந்த விவகாரத்தை பற்றி பேசுவது அற்பத்தனமானது. தேவையற்றது. எனக்கு விருது அளித்தவர்களுக்கு நன்றி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.
பாஜவில் சேரவோ, தலைவராக்கவோ இருக்கும்படி யாரும் அழைக்கவில்லை. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பது போல் எனக்கும் பூச முயற்சி நடக்கிறது. இதில் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்டிக் கொள்ள மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

தலைமைக்கு வெற்றிடம்மீண்டும் நிருபர்களை சந்தித்த ரஜினி கூறுகையில், நான் எப்போதும் வெளிப்படையாக பேசுவேன். சிலர் மட்டுமே எனக்கு பா.ஜ., சாயம் பூச முயற்சி செய்கின்றனர். ஆனால், அது நடக்காது. திருவள்ளுவருக்கு காவி உடையை பா.ஜ., டுவிட்டர் பக்கத்தில் மட்டும் போட்டது. வேறு எங்கும் போட வேண்டும் என சொல்லவில்லை. ஆனால், மீடியாக்கள் தான், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தின. என்னை ஒரு கட்சிக்கு வருமாறு அழைப்பது அவர்களின் விருப்பம்.

அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு எப்படி வந்தாலும், அனைவரும் அமைதி காக்க வேண்டும். மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது குறித்த விவகாரம் எனக்கு சரியாக தெரியாது. தெரியாமல் அதை பற்றி பேச மாட்டேன். பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ளது. இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டுமோ, அந்த பணியை மத்திய அரசு செய்ய வேண்டும். சினிமாவில் தொடர்ந்து கூட நடிப்பேன். அரசியல் கட்சி அறிவிக்கும் வரை நடிப்பேன்.தமிழகத்தில் ஆளுமையான சரியான தலைமைக்கு தற்போதும் வெற்றிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (149)

 • Sampath Kumar - chennai,இந்தியா

  நீங்க உங்க மனசாட்சி படி நடங்க இல்லை என்றால் உங்களுக்கும் வருணம் பூச படும்

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  இந்த பேட்டி ஒரு பாவி நண்பனை சந்தித்த பின் வந்தது . மீண்டும் மீண்டும் மாறிக்கொண்டே இருக்கும் இவர் பேச்சு. மக்கள் இவரை பொருட்டாகவே மதிக்கவில்லை

 • மணி - புதுகை,இந்தியா

  கரி ஓகேவா?

 • Gopal Raju - vancouver,கனடா

  Hello Rajini, please stop this opportunistic game gentleman. In fact BJP will grow without you. One big national party with due respect to you, if they are approaching, just act diplomatically. Other politicians, they did politics after entering into politics, where as you just to enter into politics itself, you are doing big politics. Please assess yourself, i am telling you, your vote bank may be close to 2 to 3 %, in case if any AIADMK, PMK ,DMK , unhappiness cadres join you, you can have another 3 to 5 %. In all you will have may be close to 8%, You just can't do anything. So stop poltiics and act in movies after 70 go to some good ads like amitabh and retire gracefully playing with your grand kids. Jai Hind

 • Mahmood Jainulabdeen - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எம்.ஜி.ஆர் சிவாஜி நடித்து ஓய்ந்தar சமயத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தில் உள்ளே வந்து சூப்பர் ஸ்tடார் ஆனவர் தான் இவர். அரசியலிலும் அது போல் ஒரு வெற்றிடத்தை எதிர்பார்க்கிறார்.

Advertisement