Advertisement

தீ பிடித்த இரண்டு கார்கள்

பரங்கிமலை:கிண்டி, நங்கநல்லுார் பகுதியில், நேற்று இரவு, இரண்டு கார்கள் திடீரென தீ பிடித்தன.

குன்றத்துாரைச் சேர்ந்தவர் தியாகராஜன், 40. நேற்று இரவு, அண்ணாநகரில் இருந்து, 'நிசான் சன்னி' காரில், குன்றத்துார் நோக்கி புறப்பட்டார்.கிண்டி, கத்திப்பாரா அருகில் சென்றபோது, கார் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. உடனே, காரில் இருந்து இறங்கினார். சிறிது நேரத்தில், கார் தீ பிடித்தது.கிண்டி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இருந்தும், கார் முழுதும் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ பிடித்துள்ளது. இதனால், கிண்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


* நங்கநல்லுார், 24வது தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 45. கார், 'மெக்கானிக்' கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு, பழுது நீக்க வந்த மாருதி கார் திடீரென தீ பிடித்தது.ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement