Advertisement

பாதியில் நின்ற 20 ஆயிரம் வீடுகள் உயிர் பெறும்; கட்டுமான துறை வரவேற்பு

Share
'ரியல் எஸ்டேட்' துறையை ஊக்குவிக்க, மத்திய அரசு வழங்க முன்வந்துள்ள நிதி உதவியால், தமிழகத்தில், 20 ஆயிரம் வீடுகள் அடங்கிய, 100 திட்டங்கள் மீண்டும் உயிர் பெறும் என, தெரியவந்துள்ளது.

பொருளாதார மந்தநிலை காரணமாக, நிதி கிடைக்காமல், பாதியில் நின்று போன கட்டுமான திட்டங்களுக்கு கடன் வழங்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன் வாயிலாக, நாடு முழுவதும், 1,600 திட்டங்களில் முடங்கியுள்ள,4.58 லட்சம் வீடுகள் கட்டும் பணிகள், மீண்டும் துவங்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

பாதியில் முடங்கிய திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, அவற்றில், மக்கள் வீடு வாங்க முன்வருவர். இதன் வாயிலாக, ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம் அதிகரிக்கும் என,மத்திய அரசு எதிர்பார்க்கிறது. பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள் என்ற அடிப்படையில், டில்லி, மும்பை நகரங்களில் முடங்கியுள்ள பெரும்பாலான திட்டங்கள் பயன் பெறும்.தமிழகத்தில், 20 ஆயிரம் வீடுகள் அடங்கிய, 100 கட்டுமான திட்டங்கள், இதில் பயன் பெறும் என, தெரிய வந்துள்ளது.

புத்துயிர் பெறும்:இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின், தென்னக மைய தலைவர் எஸ்.ராமபிரபு கூறியதாவது:பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களுக்கு, வங்கிகள், ஏற்கனவே தர ஒப்புக்கொண்ட கடன்கள் கிடைப்பது, பாதியில் தடைபட்டது. அதனால், கட்டுமான பணிகளும் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம் முடங்கியது. தற்போது, மத்திய அரசு எடுத்துள்ள முடிவால், தமிழகத்தில் பாதியில் பணிகள் நிறுத்தப்பட்ட, 20 ஆயிரம் வீடுகளுக்கு, புத்துயிர்கிடைக்கும். இத்திட்டங்களில் விற்காமல் உள்ள வீடுகள் விற்கப்படும். கட்டுமான துறை சார்ந்த பிற துறைகளிலும், வர்த்தகம்சூடுபிடிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

வரவேற்பு:தமிழ்நாடு வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: பாதியில் நின்ற திட்டங்களுக்கு, நிதி உதவி வழங்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இதனால், நின்றுபோன கட்டுமான பணிகள், மீண்டும் துவக்கப்படும். இத்திட்டங்களில் வீடுகள் விற்கப்படுவதால், பொருளாதாரம் மேம்படும். இதில், கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவதிலும், வீடு விற்பனையிலும், ஜி.எஸ்.டி., வரி தொடர்பான பிரச்னைகள், இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. இப்பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு முன்வர வேண்டும். வரி விதிப்பு கோணத்தில் ஆராய்ந்தால், இதற்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

பதிவு அவசியம்:மத்திய அரசு முடிவின்படி, கட்டுமான திட்டங்களுக்கு நிதியுதவி பெற, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்திருப்பது கட்டாயம். இதனால், ரியல் எஸ்டேட் சட்டத்தில் விலக்கு பெற முயன்ற பல நிறுவனங்கள், அதற்கான ஆணையத்தில் பதிவு செய்ய, இனி ஆர்வம் காட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • Darmavan - Chennai,இந்தியா

  பில்டர்கள் வீடு வாங்குபவர்களிடம் வாங்கிபணத்துக்கு என்ன கணக்கு..,இந்த திட்டம் ஒரு ஏமாற்று வேலை கேவலம்.

 • Thiyaga Rajan - Chennai,இந்தியா

  This will help only the real estate companies and there is no use. When no one is ready to buy the flats considering the situation here how the company do the repayment. The government have to build the confident to the working people by increasing by improving the situations to good by adopting some policies. The cost of living here can be reduced by implementing the tax deduction on petrol & Diesels. by collecting corrupted money in the swizz banks, seizing the amounts from the corrupted politicians, institutions & corporate, etc., . There are so many thing to take the actions from the government. But here nothing is happening.. Where are the seized money after raid. Nothing is uncovered by the media / Govt. Again the seized money goes to the corrupted person. The money moves on to the their pockets and not brought out to the peoples benefit. The media simply highlighting actors & actresses personal issues... The govt always penalize the common man.

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  இது ஓர் ஊழல் திட்டம் போல் தோன்றுகிறது. மேலும் கடன் கொடுத்து வீடுகள் கட்டி முடிக்கப்பட்டாலும் அவை விலை போகும் என்ற உத்தரவாதம் யாரும் தரமுடியாது. அத்தனை நிதியும் வாராக்கடன்களாக உருமாறி வரி கட்டுபவர் தலையில் விழும்.

 • Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா

  இந்த துறையில் அரசியல்வாதிகள் குண்டாஸ் அதிகமாக உள்ளனர். இதனால் கட்டுமானங்கள் நிறை பெரும். ஏற்கனவே விற்காமல் இருக்கும் வீடுகளுடன் இவைகளும் சேர்ந்து போகும். விற்கவில்லை என அவர்களும் பழைய படி நாமம் போடுவார். மக்களுக்கு பயன் இல்லை

 • T.S.SUDARSAN - Chennai,இந்தியா

  Gift from budget for poor, salaried and mid income people 1)No tax rate increase. 2)Pay more tax 3)Pay more for petrol, diesel, gold and cigarettes’ 4)Extra increase in expenditure and burden to all poor, mid income and salaried 5)The rate of IT for corporate is down since they are deciding all sectors expect poor, mid income and salaried 6) The poor, mid income and salaried have to spend more and more and they should leave this country india to other countries for their livelihood. 7)Affected people 90 crores. 8) since i am paying income tax to the tune of 20%, GST in all products to 30% and other tax rate as minimum 10% and i have only a meger amount of 39% for my expenditure as food, medical,transport, rent, dressing and so on so forth i am not able to purchase any type of housing. 9) More over the housing sector gives minimum land area as 10 to 30 % as land and 30% Built up area and balance 40% as common area in which no individual can claim rights and this will be the main cause for non selling of houses in Flats,Row houses, and villas. 10) i am a senior citizen and what ever the amount i have i want to use it for my survival. Hence providing 25000 crores of money is a waste expenditure for housing sector. A gift given by mrs. Nirmala sitaraman, FM to poor, mid income and salaried. Sorry to say that a poorest budget to all three as told above.

Advertisement