Advertisement

8 பிள்ளைகள் பெற்றும் அனாதையான தாய்; ஆதரவுக்கரம் நீட்டிய அரியலூர் போலீஸ்

அரியலுார்: எட்டு பிள்ளைகள் இருந்தும் அனாதையாக விடப்பட்ட மூதாட்டியை அரியலுார் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பாதுகாத்து வருகின்றனர்.

அரியலுார் கவரப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி சுலோச்சனா 90. இவருக்கு ஐந்து மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். ஜெகநாதன் 40 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார்.இவரது மூன்று மகன்கள் திருப்பூரிலும்; இரு மகன்கள் கவரப்பாளையத்திலும் கூலி வேலை செய்து வருகின்றனர். மூன்று மகள்களுக்கும் திருமணமாகி கவரப்பாளையம் சுற்றுவட்ட கிராமத்தில் உள்ளனர்.

சில ஆண்டுகளாக திருப்பூரில் மகன்களுடன் இருந்த சுலோச்சனாவை தீபாவளிக்கு இரண்டு தினம் முன் கவரப் பாளையத்திற்கு அழைத்து சென்றனர். பெற்ற தாயை கவரப்பாளையத்தில் வசிக்கும் இரு மகன்களும் வீட்டில் சேர்க்க மறுத்தனர். இதனால் தெருவில் சுற்றித் திரிந்ததுடன் அதே கிராமத்தில் உள்ள பஸ் நிழற்குடையில் சுலோச்சனா படுத்துகிடந்தார்.

சில நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதன்பின்னும் தாயை கவனிக்க அவரது மகன்கள் முன்வரவில்லை. இதனால் சமூக ஆர்வலர்கள் சிலர் ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரை சிகிச்சைக்கு சேர்த்தனர். மீண்டும் கவரப்பாளையம் நிழற்குடையிலேயே சுலேச்சனா தஞ்சமடைந்தார். விபத்தில் ஏற்பட்ட காயங்களால் வேதனைப்பட்டார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. மோகன்தாசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மோகன்தாஸ் அந்த மூதாட்டியை மீட்டு ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தொடர்ந்து பராமரித்து வருகிறார். மூதாட்டிக்கு தேவையான வசதிகளை டி.எஸ்.பி. மோகன்தாஸ், போலீஸ்காரர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் செய்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    பெற்றோரை தவிக்க விடுவோர் சொர்க்கம் புக முடியாது என்று இஸ்லாம் எச்சரிக்கின்றது.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    பெரிய பாவம் ...இந்த மாதிரி நெறய நடக்குது

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    பத்துப்பிள்ளைகள் ஒரு தாய்க்கு பாரமே இல்லே ஆனால் ஒரு தாய் எல்லாப்பிள்ளைகளுக்கும் பெரும்பாரம் தான் மருமகள் நல்ல பொன்னாக இருந்தால் மனத்துப்போகும் இல்லேன்னா அவளுக்கு மரணம்தான் பெஸ்ட்

  • oce - kadappa,இந்தியா

    இத்தகைய மக்கள் பெருக்கம் இந்தியாவில் சிறுபான்மை மதத்தில் அதிகம் இருக்கிறது. அங்கு இப்படி பிள்ளைகள் பெற்றோரரை கைவிடுவதில்லை. கை விட்டாலும் வெளிநாடுகளில் பெரும்பான்மையினராக வசிக்கும் அம்மதத்தினரின் உதவிகள் உடனுக்குடன் கிடைத்து விடும். பெற்றோரை பிள்ளகள் நடுத்தெருவில் விட்டு விடுவது இந்து மத தர்மத்திற்கே இவர்கள் சாபக்கேடுகள். தலை மகன் ஊதாரியானால் அவனை அடுத்து பிறக்கும் உடன் பிறப்புகளும் அப்படியே வளரும். தலை மகன் கூலி வேலை செய்தாலும் அடுத்து பிறக்கும் தம்பி தங்கைகளை முன்னுக்கு கொண்டு வந்திருக்கலாம். அந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் தொடர் ஒத்தாசையாக இருந்து குடும்பத்தை கரையேற்றி இருக்கலாம். வாழ்க்கையை மனிதன் ஒரு தடவை தான் பார்க்கிறான்.

  • TamilArasan - Nellai,இந்தியா

    காவல்துறையினர் பாதம் தொட்டு வணங்குகிறேன் - உன்னதமான செயல் புரிகிறீர்கள் வாழ்த்துக்கள் டி.எஸ்.பி. மோகன்தாஸ், போலீஸ்காரர் மணிகண்டன்

    • Darmavan - Chennai,இந்தியா

      எல்லா காவல்காரங்களும் இப்படி இல்லை ஒரு சிலரே அப்படி.அவர்கள்தான் போலீஸ் துரையின் உயிர்கள்.

Advertisement