Advertisement

பொருளாதாரத்தை உயர்த்துவதில் மாவட்டங்களுக்கு பங்கு உண்டு

தர்மசாலா: ''நாட்டின் பொருளாதாரத்தை 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதில் அனைத்து மாநிலங்கள், மாவட்டங்களுக்கு பங்கு உள்ளது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் பொருளாதாரத்தை 2025ம் ஆண்டுக்குள் 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் பங்கு உள்ளது.

இப்போது மாநிலங்கள் முதலீட்டை பெறுவதில் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்றன. ஹிமாச்சலில் சுற்றுலா, மருந்து துறைகளில் முதலீடு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. எளிதாக தொழில் துவங்குவதில் சிறப்பாக செயல்பட்ட நாடுகள் வரிசையில் முதல் 10 இடங்களில் இந்தியாவும் உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

'சர்ச்சை கருத்துகளை தவிருங்க''அயோத்தி விவகாரம் தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்' என, அமைச்சர்களை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம், நேற்று முன்தினம் இரவு, டில்லியில் நடந்தது. அதில், அயோத்தி தீர்ப்பு வெளியாவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

'அயோத்தி விவகாரத்தில் அமைச்சர்கள், சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். சமூகத்தில் ஒற்றுமையும், நல்லிணக்கமும் நிலவுவதை பாதுகாக்க வேண்டும். அயோத்தி தீர்ப்பு, எந்தத் தரப்பினருக்கு வெற்றி, தோல்வி என்ற கோணத்தில் பார்க்கக் கூடாது' என, பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக, கேபினட் செயலர் ராஜிவ் கவுபா நேற்று தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  மற்ற மதவாத நாடுகளில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து மசூதி கட்டுகிறார்கள் . உலகின் முன்னணி பொருளாதார நாடாக மாறும் இந்தியாவால் மாற்றும் மோடியால் ஒரு லச்சம் கோடி இல்லாவிட்டாலும் வளராத நாடுகளைப்போல் ஒரு பல்லாயிரம் கோடிகள் செலவழித்தாவது கோவில் காட்டமுடியுமா ?. அப்படி முடியாதவரை இந்தியா முன்னேறி விட்டதாக 80% இந்துக்கள் இந்தியா முன்னேறியதாக கருதமாட்டார்கள் . அந்நியர்களின் , ஆளும் கட்சிகளின் ஒரு சில எடுபிடிகள் வேண்டுமானால் அப்படி கருதலாம் .

 • Harinathan Krishnanandam - Chennai,இந்தியா

  இதுவரையில் மோடி மட்டும் தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் இன்று இருந்தோம் இப்போதுதான் எங்களுக்கு வேலை செய்யச்சொல்லி அனுமதி கிடைத்து இருக்கிறது இனி கூடிய விரைவில் எங்கள் மாவட்டத்தில் சாலைகள் அமைப்போம் பாலங்கள் கட்டுவோம் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தருவோம் இனி தாராளமாக எங்களிடம் மனு கொடுங்கள் அத்துடன் பத்து விழுக்காடு லஞ்சமும் சேர்த்து கொடுங்கள் மறந்து விடாதீர்கள்

 • ஆப்பு -

  இதுவரையில் வராத கெட்டப்.

 • Anandan - chennai,இந்தியா

  ஆனா மத்தியில் உள்ள நாங்க வெட்டியா பேசி பொழுதை போக்குவோம்னு சொல்ல வாறாரா?

 • s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா

  அயோத்தி விவகாரத்தில் கண்டபடி கருத்துக்களை சொல்லிக்கொண்டு திரியக்கூடாது என மோடி அவர்கள் கூறினாலும் கட்சியினர் பிதற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர்...அதுபோல திருக்குறளை கூறி வள்ளுவரின் பெயரை உலகளவில் மேலும் உயர்வடைய செய்ய மோடி அவர்கள் முயற்சித்தாலும் கட்சியினர் வள்ளுவருக்கு சாயம் பூசி மோடி அவர்களின் முயற்சியை தடுக்கத்தான் செய்கின்றனர்.

Advertisement