Advertisement

ஹிந்து மாணவி கற்பழித்து கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், ஹிந்து மதத்தினர், சிறுபான்மையினராக உள்ளனர். பாக்., மொத்த மக்கள் தொகையில், ஹிந்துக்கள், 2 சதவீதம் பேர் தான் உள்ளனர். இங்கு, சிந்து மாகாணத்தில் உள்ள பல் மருத்துவ கல்லுாரியில், நிம்ரிதா சாந்தினி என்ற, ஹிந்து மதத்தை சேர்ந்த மாணவி, இறுதியாண்டு படித்து வந்தார்.

சமீபத்தில், அவர் தங்கியிருந்த கல்லுாரி விடுதியில், நிம்ரிதா, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது பிரேத பரிசோதனை அறிக்கை, தற்போது வெளியாகியுள்ளது. அதில், நிம்ரிதா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின், கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிம்ரிதா கொலைக்கு காரணமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    என்ன முளைத்துள்ளது..........

  • சமத்துவம் - Chennai,இந்தியா

    இந்திய அரசாங்கம் இதற்க்கு ஒரு நல்ல முடிவு காண வேண்டும். பாவம் அங்குள்ள இந்துக்கள், பகிஸ்தானிகள் இந்தியாவில் உள்ள ஹிந்துக்கள் போல் பெரும்பான்மையினராக இருந்தாலும் பிற மதத்தை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மையும் பக்குவம் இல்லாத அறிவைப்பெற்ற மூர்க்கர்கள். இப்போது இங்குள்ள பிரிவினை வாத அடிமைகள் மற்றும் காங். பிரதிநிதிகள் தங்கள் சட்டையில் 'don't s your family ladies to Pakistan' என்று எழுதி உடுத்திக்கொண்டு, ட்விட்டரில் அதை பரப்பி பாகிஸ்தானை அசிங்க படுத்துவார்களா?

Advertisement