Advertisement

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி: இந்தியா கண்டனம்

மெல்போர்ன்: 'பயங்கரவாதத்துக்கு எதிராக, பல்வேறு நாடுகள் இணைந்து செயல்படும் நிலையில், ஒரு சில நாடுகள் மட்டும் நிதி உதவி செய்து வருகின்றன' என, ஆஸ்திரேலியாவில் நடந்த கூட்டத்தில், பாக்.,கின் பெயரைக் குறிப்பிடாமல் இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நடவடிக்கைபல்வேறு நாடுகளின், நிதிப் புலனாய்வு அமைப்புகளின் கூட்டத்தின்போது, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிக்கப்படுவதை தடுக்க, ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, 'பயங்கரவாதத்துக்கு நிதி கிடையாது' என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் மாநாடு நடத்த, 2018ல் முடிவு செய்யப்பட்டது.இந்த அமைப்பில், இந்தியா, பாக்., சீனா உட்பட, 70க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன.எப்.ஏ.எப்.டி., எனப்படும் நிதி நடவடிக்கை செயல் குழு அமைப்புக்கு உள்ளது போன்ற அதிகாரம் இந்த அமைப்புக்கு கிடையாது.

அதே நேரத்தில், பயங்கரவாதத்துக்கான நிதி உதவியை தடுப்பது குறித்து விவாதிக்க, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.தற்போது, இந்த மாநாடு, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடக்கிறது. அதில், மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது. கூட்டத்தில், பாக்.,கின் பெயரைக் குறிப்பிடாமல், கிஷன் ரெட்டி பேசியதாவது:எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2011ல் அல் குவைதாவின் தலைவர் ஓசாமா பின் லேடன் கொல்லப்பட்டார். ஆதரவுஆனாலும், அதன் ஆதரவு மற்றும் துணை அமைப்புகள் தற்போதும் செயல்பட்டு வருகின்றன. ஐ.எஸ்., அமைப்பின் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டுள்ளார்.

ஆனாலும், பயங்கரவாதம் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்க வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை இணைந்து செயல்படுத்த உறுதி பூண்டுள்ளோம். ஆனால், இந்த உறுதியை மீறி, சில நாடுகள், மாற்று வழிகளில், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்து வருகிறது. இதை, தடுத்து நிறுத்த வேண்டும்.பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.இவ்வாறு, அவர் பேசினார்.

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும்பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்கும் இந்தக் குழுவின் அடுத்தக் கூட்டம், 2020ல், இந்தியாவில் நடக்க உள்ளது. அமைச்சர்கள் மட்டத்திலான இந்தக் குழுவின் கூட்டத்தை நடத்த உள்ள மூன்றாவது நாடாக, இந்தியா இருக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement