Advertisement

நான் வெற்றி பெறாவிட்டால்... அமெரிக்காவுக்கு டிரம்ப் சாபம்

Share
வாஷிங்டன்: தற்போது நடந்து வரும் மாகாண தேர்தலில், அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் 'அமெரிக்க அதிபராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும்' என, அவர் கூறிஉள்ளார்.

அமெரிக்க அதிபராக, குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், 2017ல் பதவியேற்றார். மிகப் பெரும் பணக்கார தொழிலதிபரான அவர், அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முயற்சித்து வருகிறார். அதிபர் தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பார்லி., குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் மாகாணத் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை நடந்த தேர்தலில், பல்வேறு இடங்களில், குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. கவர்னர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ள லுாசியானாவில், டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: நாம் வென்று வருகிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றியை பெற்று வருகிறோம். இதைவிட சிறப்பானவை விரைவில் நடக்க உள்ளது.அரசியல் ரீதியில் பழிவாங்கும் வகையில், தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக என் மீது, ஜனநாயகக் கட்சி பொய் பிரசாரம் செய்து வருகிறது. இதற்கெல்லாம் நான் கவலைப்பட போவதில்லை.

என்னுடைய தலைமையில், அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், நாடு மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதுவரை இல்லாத அளவுக்கு, வரலாறு காணாத மோசமான நிலை ஏற்பட்டு விடும். இவ்வாறு, அவர் பேசினார்.

4 இந்தியர்கள் வெற்றிமாகாணத் தேர்தலில், ஒரு முஸ்லிம் பெண், அதிபர் மாளிகையின் முன்னாள் ஆலோசகர் உட்பட, நான்கு இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.முன்னாள் பேராசிரியையான கசாலா ஹாஸ்மி, விர்ஜினியா மாகாண, எம்.பி.,யாக வெற்றி பெற்றார். அமெரிக்க தேர்தலில் வென்ற முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை, இவர் பெற்றார்.

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது, வெள்ளை மாளிகையின் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இருந்த, சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியாவின், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கலிபோர்னியாவில், மனோ ராஜு வென்றார். வடக்கு கரோலினாவில், டிம்பிள் அஜ்மீரா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • மாயவரத்தான் - chennai,இந்தியா

  இன்றைய நிலையில் அமெரிக்காவுக்கு ட்ரம்தான் சரி. கொடுமை என்னவென்ற்றால் அமெரிக்க மக்களும் தமிழக மக்கள்போல் எதிர் கட்சிகளின் பொய் பிரசாரத்திற்கு மயங்குபவர்களாகத்தான் இருக்கிறார்கள். ட்ரம்பின் காலத்தில்தான் அமெரிக்காவில் பெரிய தீவிரவாத செயல்கள் நடைபெற வில்லை. வெளிப்படையாக பேசக்கூடியவராகவும் இருக்கிறார்.

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  வந்துட்டாரு விசுவாமித்திரன் சாபம் பொய்யப்போ உன் சாபம் பலிக்காது பயித்தியம்கூட உனக்கு வோட்டுப்போடாது .உன் மக்கள் என்ன இந்தியRகள் போல பேக்குகளா திட்டும் இலவசமாய்த்தாய்க்கும் எருமை சாணியும் வாங்கிண்டு ஓட்டுப்போட , தமிழ்நாட்டுலேதான் நடக்கும் உங்க யு எஸ் லே நோ சான்ஸ்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  திறமையானவர். தில்லுமுல்லு செய்வதிலும் திறமையானவர்.

 • Asagh busagh - Munich,ஜெர்மனி

  ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அதுவே உண்மையாகி விடாது mr.டிரம்ப். Fake நியூஸ் பரப்பி, புடின் உடன் ரகசிய கூட்டணி வைத்து, பாலைவன துண்டு தலையனுங்களின் காசை இறைச்சு ஒரு முறை மக்களை ஏம்மாதி புடலாம். ஆனா அதே கணக்கு இனி ஒர்க்கவுட் ஆக வாய்ப்பு மிக குறைவு. உன் பயோஸ்கோப் படத்தின் ரீல் அறுந்து ரொம்ப நாள் ஆச்சு.

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  அமெரிக்கர்கள் அரசியலிலும் வியாபாரம் செய்கிறர்கள்..வியாபாரத்தில் தான் எதிலும் லாபம்,எல்லாவற்றிலும் லாபம் பார்ப்பார்கள்..இப்படி அரசியல் செய்து இப்போ அமெரிக்க என நிலையில் உள்ளது..?. அரசியல் நீதி வேறு வியாபார நீதி வேறு..அமெரிக்க சுறுப்புற சூழல் கமிட்டியில் இருந்த்து விலகி விட்டது..அப்படினா அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..இப்படி போனால் உலகம் என்ன ஆகும்..?.கற்று மாசு பட்டு உயிரனங்கள் இருக்க முடியாது..இதை நோக்கி அமெரிக்க செல்கிறது...இது அரசியலை ல்லை வியாபாரமா..?

Advertisement