Advertisement

22 மாநிலம்; 501 கோவில் சகோதரர்கள் அசத்தல்: ஆன்மிக பயணத்தில் கின்னஸ் முயற்சி

காரைக்குடி: காரைக்குடி அருகே, சகோதரர்கள் இருவர், இளைஞர்களிடம் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கின்னஸ் சாதனை படைக்கவும், கன்னியாகுமரி முதல் ஜம்மு - காஷ்மீர் வரை, ஆன்மிக பயணம் செய்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, கே.வேலங்குடியைச் சேர்ந்த துரைராஜ் மகன்கள் பாண்டிதுரை, 30, கார்த்திகேயன், 25. மென்பொருள் பொறியியல் படிப்பை முடித்த இவர்கள், பெங்களூரில் பணிபுரிகின்றனர்.இளைஞர்களிடம், ஆன்மிகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இவர்கள் இருவரும், ஆன்மிகப் பயணம் புறப்பட திட்டமிட்டனர்.இதன்படி, 13 ஆயிரம் கி.மீ., காரில் பயணம் செய்து, 22 மாநிலங்களில் உள்ள, 501 கோவில்களுக்கு, ஆன்மிக பயணம் செல்கின்றனர்.

இதன் மூலம், 'கின்னஸ், லிம்கா' உள்ளிட்ட சாதனைகளை படைக்க உள்ளனர். சகோதரர்களின் ஆன்மிக பயணத்தை, கலெக்டர் ஜெயகாந்தன், எஸ்.பி., ரோஹித்நாதன் ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர்.பாண்டிதுரை கூறியதாவது:ஜீன்ஸ் அணிந்த இளைஞர்களுக்கும், ஆன்மிக உணர்வு உண்டு என்பதை நிரூபிக்கவே, இந்த சாதனை பயணம்.நாங்கள் செல்லும் காரில், ஜி.பி.எஸ்., சார்ஜர், சமையல் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. பயணம், 40 நாட்கள் வரை தொடரலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்

    இறையருளால் உங்கள் ஆன்மிக பயணம் சிறப்பாக அமைந்து,இளைஞர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக அமையட்டும்.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    இறைவன் அருள் பெற்றவர்கள் இவர்கள் அதனால் தான் தரிசனம் செய்ய முடிகிறது.

  • குசும்புகாரன் - Tamildadu,இந்தியா

    வாழ்த்துக்கள் உங்கள் பயணம் சிறப்பாக அமைய வேண்டும்.....

Advertisement