Advertisement

ஐ.டி., நிறுவனங்களில் ஆட்குறைப்பு கூடாது: முதல்வர்

சென்னை: ''தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது,'' என, முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

சி.ஐ.ஐ., என்ற, இந்திய தொழில் கூட்டமைப்பும், தமிழக அரசும் இணைந்து நடத்தும், 'கனெக்ட் 2019' என்ற, 18வது தகவல் தொழில்நுட்ப மாநாடு, சென்னை வர்த்தக மையத்தில், நேற்று துவங்கியது.

பல சாதனைகள்மாநாட்டை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்து பேசியதாவது:தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை, அதிகளவில் பயன்படுத்துவதிலும், நுகர்வதிலும், தமிழகம் முன்னிலையில் உள்ளது. மத்திய, 'நிடி ஆயோக்' வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் அதிக புதுமைகளை படைக்கும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம், இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மேலும் பல சாதனைகள் படைக்க, இந்த மாநாடு, ஒரு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும். கடந்த ஆண்டு மாநாட்டு நிறைவு விழாவில், தமிழகத்தில், தற்போது உள்ள நிறுவனங்கள், தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டேன். அதன்படி, ஓராண்டில், 6,500 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. இதன் வாயிலாக, 60 ஆயிரத்து, 100 புதிய வேலை வாய்ப்புகளும் கிடைத்து உள்ளன.

தகவல் தொழில்நுட்ப துறையில், 10 சதவீதம் ஏற்றுமதியும், 4 சதவீதம் வேலைவாய்ப்பும், ஓராண்டில் அதிகரித்துள்ளது. இதே ஆதரவை, எதிர்காலத்திலும் தொழில் நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.'எலக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர்' உற்பத்தி கொள்கை, விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த கொள்கை, புதிய தொழில் துவங்குதல், அதிக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யும். தமிழக அரசு, 500 கோடி ரூபாய் மதிப்பில், 'தமிழ்நெட்' திட்டம் வாயிலாக, தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நகரப்பகுதிகளுக்கும், அதிவேக இணையதள வசதியை விரிவுபடுத்த உள்ளது.

'யூடியூப் சேனல்'இந்த திட்டம், 18 மாதங்களில் நிறைவேற்றப்படும். தகவல் தொழில்நுட்ப துறையில், முதலீடுகளை அதிகரிக்கவும், நிதி நிலையை சீராக்கவும், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல், அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழக மின் ஆளுமை இயக்ககம் உருவாக்கிய, செயற்கை நுண்ணறிவு முக அடையாள வருகைப் பதிவு, பயிர்களின் பூச்சி பாதிப்புகளை கண்டறிந்து, தீர்வு பெறும் வசதி, அரசு சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளும், 'யூடியூப் சேனல்' ஆகிய திட்டங்களையும், முதல்வர் துவக்கி வைத்தார்.

மேலும், அண்ணா பல்கலை மற்றும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., சென்னை உடன், இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செயலர் சந்தோஷ்பாபு பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • ஆப்பு -

  ஐயா காமெடி பண்றாரு. அமெரிக்காவுல நம்ம ஆளுங்களுக்குத் தேவை இல்லேன்னா இங்கே அவிங்களை ஒக்காத்தி வெச்சு சம்பளம் குடுக்க முடியுமா? பேசாம வேலைநீக்ஜம் செய்யப்படுகிற ஆளுங்களை அப்பிடியே அரசு உத்யோகம் குடுத்துருங்க. நல்ல திறமை இருக்கு அவிங்களுக்கு.

 • sathishkumar - chennai,இந்தியா

  என்ன வளர்ச்சியோ போங்க ...ரோட்ல பாத்தா இன்னும் பிச்சைக்காரர்கள் இருக்கத்தானே செய்யுறாங்க..இதுல எங்க வளர்ச்சி இருக்கு..சோத்துக்கே வழி இல்லாதவங்களும் இருகாங்க BMW கார் ல போறவங்களும் இருகாங்க. மனுஷனா பொறந்தா ஹுமானிட்டி இருக்கனும்...மனிதநேயம் இருக்குறவங்களைத்தான் மனிதனு சொல்லணும். பிச்சக்கரங்களே இல்லாத நிலைமை எப்போ வருதோ அப்போதான் நல்ல வளர்ச்சினு சொல்லணும். ஐடி ல வேல பாத வீக் எண்டு செலவு பண்ணனுமா என்ன ..அந்த வேஸ்ட் ஆஹ் போகுற காசுல நாலு பேர்க்கு சாப்பாடு வாங்கி தரலாமே. ஐடி வேலைனு ஓவர் ஆஹ் ஆடுனா இப்படித்தான் ஆகும்.

 • நக்கல் -

  IT துறை இப்படித்தான் வேலை செய்யும்... டெக்னாலஜி என்பது மாறிக்கொண்டிருக்கிற ஒன்று... எல்லோரும் புது விஷயங்களை கற்றுக்கொண்டு வேலை செய்யும் கம்பெனிகளுக்கு லாபம் ஈட்ட உதவ வேண்டும்... இல்லாதவர்கள் வெளியே தள்ளப்படுவார்கள்... உலகம் முழுக்க இந்த கம்பெனிகள் இப்படித்தான் இயங்குகின்றன... வேலையில் இருக்கும்போது அதிக பணம் பார்ப்பார்கள், வேலை தெரியவில்லை என்றால் வெளியேற்றம்தான்... இதுக்கு யூனியன் எல்லாம் எடுபடாது.... இந்த துறை பற்றி தெரிந்து கொண்டு இதை படிப்பதில் ஆர்வம் காட்டுவது நல்லது...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  நீங்க சொன்ன யார் கேட்க போகிறார்கள். இந்த IT துறை என்பது நிரந்தரம் இல்லாதது என்பதை உணர்ந்து , இதில் வேலை செய்பவர்கள் தேவை அற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். கையில் பணம் கிடைத்தவுடன் வீடு , கார் மற்றும் பொருட்கள் வாங்கி குவிக்கிறார்கள், வார இருத்தி கொண்டாட்டங்கள் வேறு. தீடிரென்று வேலை போய்விட்டால் என்ன செய்வீர்கள். வருங்காலத்திற்கு சேமித்து வையுங்கள். கடன் வாங்கி ஆடம்பரத்திற்கு செலவு செய்யாதீர்கள்.

 • Tamil - chennai,இந்தியா

  தமிழகம் தயாரிப்பு துறையில் சீனா வுடன் போட்டியிட்டு நல்ல தரமான பொருட்களை சீனாவை விட குறைந்த விலைகளில் அழகிய மாடல் வடிவமைத்து சர்வதேச தரத்துடன் தயாரிக்கப்படவேண்டும் தயாரிப்பு குறைவு ஏற்படும்பொழுது சேவை துறையின் IT பணி குறைக்கப்படும். இந்தியாவின் பெரிய கார்பொரேட் நிறுவனமான ரிலையன்ஸ் ஏர்டெல் மற்றும் பல பெரிய கார்பொரேட் நிறுவனங்கள் எதற்காக சீனா பொருட்களை இறக்குமதி செய்கிறது ??? இந்தியாவில் தயாரிக்கலாமே. முக்கியமாக தமிழகத்தில் பல திறமைவாய்ந்த மனிதவளத்தை பயன்படுத்தாமல் சீனாவில் இறக்குமதி செய்வதின் மூலம் இந்தியாவை வளர்ப்பதை விட சீனா உயர்த்துவதற்கு வழிவகுக்கிறது. ஆசியா பெரிய தொழிற் பூங்காவில் ஒன்றாக இருந்த அம்பத்தூர் எஸ்டேட் இன்று நிலைமை என்ன ??? உற்பத்தி நிறுவனங்கள் அடியோடு அழிந்துவருவது தமிழகம் மற்றும் இந்திய பொருளாதாரம் அழிவு காலம். தற்பொழுது அம்பத்தூர் எஸ்டேட் பல நிறுவனங்கள் BPO பணிகளை செய்கிறது. விரைவில் BPO பணி செய்ய ஆட்கள் குறைக்கப்பட்டு அனைத்தும் கணினி மயமாகும். BPO பணி முழுவதும் கணினி மயமாக மாறும் பொழுது பலர் வேலை போகும். இப்பொழுது தான் தொடங்கி உள்ளது இனி போக போக தெரியும். இந்தியாவின் உளநாட்டிற்கு தேவைப்படும் பொருட்களை கூட கேவலம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில் யாருக்கு வேலை கிடைக்கும் ??? இந்தியருக்கா ??? சீனாவிற்கா ???? இந்தியவில் தயாரிக்கமுடியும் என்ற பொருட்கள் அனைத்திலும் இறக்குமதியை மறைமுகமாக தடுக்கப்படவேண்டும் இந்தியாவில் தயாரிக்கும் திறன் மற்றும் வேலையில்லாமல் பலர் இருக்கும் நிலையில் தன் நாட்டிற்கு தேவைப்படும் பொருட்களை கூட தன் நாட்டில் தயாரிக்காமல் அடுத்த நாட்டில் வாங்கி விற்பனை செய்யும் நிலை இருக்கும்வரை இந்திய பொருளாதாரம் உயராது வேலை இல்லாமல் இருப்போர் அதிகரிக்கக்கூடும். சிறு பெரு தயாரிப்புநிறுவனம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சர்வேதேச சந்தைகளில் சீனாவை எதிர்கொள்வதுடன் உள்நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யலாம். பொருளாதாரமும் உயரும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்..

Advertisement