Advertisement

முதியவரிடம் வாங்கிய லஞ்ச பணம் திருப்பி கொடுக்க வைத்த கலெக்டர்

ராமநாதபுரம் : முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக, அரசு ஊழியர் லஞ்சமாக பெற்ற பணத்தை, பொதுமக்கள் முன்னிலையில், ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் திருப்பி கொடுக்க வைத்தார்.


ராமநாதபுரம் அருகே, மாடக்கொட்டான் கிராமத்தைச் சேர்ந்தவர், தங்கராஜ், 65. நேற்று நடந்த, மக்கள் குறைதீர் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை கேட்டு, கலெக்டர் வீரராகவ ராவிடம் மனு அளித்தார்.அப்போது, அவர், 2018ல், ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில், முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக, சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு உதவியாளர் மாரியிடம், 1,000 ரூபாய் லஞ்சம் வழங்கியதாகவும், அவர் உதவித்தொகை வாங்கி தராமல் அலைய விடுவதாகவும் தெரிவித்தார்.

கலெக்டர், உடனே மாரியை அழைத்து, 'லஞ்சமாக, 1,000 ரூபாய்வாங்கினீர்களா' என கேள்வி எழுப்பினார். அவரும், 'ஆமாம்' என தலையசைத்தார்.இதையடுத்து, அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில், லஞ்சப் பணம், 1,000 ரூபாயை தங்கராஜிடம் திருப்பி வழங்க, மாரிக்கு உத்தரவிட்டார். இதன்படி, 1,000 ரூபாயை, முதியவரிடம் மாரி வழங்கினார்.

மாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கவும், கலெக்டர்உத்தரவிட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

  • RajanRajan - kerala,இந்தியா

    நன்று. அரசு ஊழியர்களை லஞ்ச ஊழலுக்கு பழக்க படுத்திய திராவிட கட்சிகளின் லஞ்ச ஊழல் கலாச்சார கொள்கைக்கு நல்ல ஒரு சாவு மணி அடிக்க பட்டுள்ளது.

  • Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா

    மேல் அதிகாரி நேர்மையாகசெயல் பட்டாள் கீழ் மட்ட அளவில் ஒழுக்கம் உழைப்பு ஊக்கம் உற்சாகம் உத்வேகம் ஏற்பட்டு வெளியீடு அதிகரிக்கும்

    • Dhiraavisham.DK - Chennai,பெர்முடா

      ஐயோ ஐயோ தீம்க அடிமைகள் வடை போயிடும் ஜாக்கரதை இதெல்லாம் தேர்தல் செலவு செய்யாத அதிகாரிக்கு புரியாது கொஞ்சம் ஓவராதான் இருக்கு

  • .Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்

    லஞ்சத்துக்கு எதிரான அதிகாரிகளை பாராட்டுங்கள். லஞ்சப் பேய்களை கரித்து கொட்டி செய்வினை வையுங்கள்.

  • Baskar - Paris,பிரான்ஸ்

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போல் தமிழகத்திற்கு ஒரு வீரராகவ்.

  • Indhiyan - Chennai,இந்தியா

    அதே சமயம் மாரியை பாராட்டவும் செய்யவேண்டும். பலகோடி பெருங்குற்றம் செய்தவர்கள் எல்லாம் நான் செய்யவில்லை என இன்னும் சாதிக்கும் போது இவர் விசாரணை இன்றி தன குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisement