Advertisement

கர்ப்பிணிக்கு பிரத்யேக உடைகள்: திருப்பூர் மாணவி உருவாக்கம்

திருப்பூர்: கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் பெண்களுக்கு ஏற்ப, பிரத்யேக உடைகளை, கல்லுாரி மாணவி ஒருவர் உருவாக்கியுள்ளார்.

தேனியைச் சேர்ந்தவர், செந்தில்குமார்; அமெரிக்காவில், சுற்றுலா கப்பலில் பணிபுரிகிறார். இவரது மனைவி, பவித்ரா, 23; ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர், திருப்பூர், முதலிபாளையம், 'நிப்ட் டீ' கல்லுாரியில், எம்.எஸ்சி., அப்பேரல் பேஷன் டிசைன் படிக்கிறார்.இவர், கர்ப்பிணி அணிவதற்கேற்ற பிரத்யேக உடைகளை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளுக்கு, பிரத்யேகமாக வெவ்வேறு டிசைன்களில், குர்தீஸ், பைஜாமா; இரவு நேரம் அணிவதற்கான பேன்ட், சர்ட், லாங்க் கவுன் தயாரித்துள்ளேன். நைட்டியையும் வடிவமைத்துள்ளேன்.உடலை அழுத்தாத, எளிதாக அணியும் வகையில், மென்மையான பின்னல் துணியை பயன்படுத்தி, வயிற்றுபகுதியில் சற்று கூடுதல் தளர்வு அளிக்கும் வகையில், இந்த ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கர்ப்ப காலத்துக்கு ஒருவகை ஆடை, பாலுாட்ட வேறு ஆடை என்பது, அதிக செலவை ஏற்படுத்தும். இதை கருதி, கர்ப்ப கால ஆடைகளிலேயே, பாலுாட்டுவதற்கு தேவையான வசதியும் இணைத்துஉள்ளேன்.ஆடைகளில், மறைமுகமாக, 'ஜிப்' பொருத்தப்பட்டுள்ளது. இதை அணிந்தபடி, பெண்கள், பொது இடங்களில் கூட, குழந்தைக்கு பாலுாட்ட முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Pannadai Pandian - wuxi,சீனா

    All these are already in market Each buyer give design for their products every day I inspect these dresses in china. What she is doing is nothing but imitating old designs.....no new thinking or invention....

Advertisement