போபால் : போபால் ரயில் நிலையத்தில், 'யார்டு' பகுதியில், தண்டவாள குவியலுக்குள் சிக்கிய நாயையும், அதன் இரண்டு குட்டிகளையும், ஆறு மணி நேர போராட்டத்துக்கு பின், ரயில்வே ஊழியர்கள் மீட்டனர்.
மத்திய பிரதேச தலை நகர் போபாலில் உள்ள ரயில் நிலையத்தில், ரயில்களை நிறுத்தும் யார்டு பகுதியில், தண்டவாளங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த குவியலுக்கு அடியில், நாய் ஒன்று, நான்கு குட்டிகளை ஈன்றது. இதை நேற்று முன்தினம் பார்த்த, பிராணிகள் நல அமைப்பைச் சேர்ந்த ஒருவர், ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே ஊழியர்கள் அங்கு சென்றனர்.
ஆனால், தண்டவாளங்கள் குவிக்கப்பட்டிருந்ததால், நாயையும் குட்டிகளையும் மீட்பது எளிதாக இல்லை,ஒவ்வொரு தண்டவாளமும், 300 கிலோவுக்கு மேற்பட்ட எடையில் இருந்ததால், அதை அகற்றுவதும் எளிதாக இல்லை. ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள், பேரிடர் மேலாண்மை ஊழியர்கள், ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். கிரேன் வரவழைக்கப்பட்டு, தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. ஆறு மணி நேர போராட்டத்துக்கு பின், நாயையும், குட்டி களையும் மீட்டனர். ஆனால், நாயும், இரண்டு குட்டிகளும் மட்டுமே உயிருடன் இருந்தன; இரண்டு குட்டிகள் இறந்துவிட்டன.
மத்திய பிரதேச தலை நகர் போபாலில் உள்ள ரயில் நிலையத்தில், ரயில்களை நிறுத்தும் யார்டு பகுதியில், தண்டவாளங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த குவியலுக்கு அடியில், நாய் ஒன்று, நான்கு குட்டிகளை ஈன்றது. இதை நேற்று முன்தினம் பார்த்த, பிராணிகள் நல அமைப்பைச் சேர்ந்த ஒருவர், ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே ஊழியர்கள் அங்கு சென்றனர்.
Good work by all. You love animals and you will automatically love humans....