ADVERTISEMENT
குன்னுார்:'மக்கள் குடியிருக்கும் சுற்றுப்புற பகுதிகளை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்புணர்வு அனைவருக்கும் அவசியம்,'என, அறிவுறுத்தப்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில் உள்ள ஆறுகள் 'கிளீன் குன்னுார்' அமைப்பு மூலம் துார்வாரப்பட்டது.அதில், அகற்றப்பட்ட மண் மற்றும் கழிவுகள் குப்பைகளை சமன்படுத்தி, 'குப்பைகூள மேலாண்மை பூங்கா' உருவாக்கப்பட்டு, புற்கள் பதித்து, செடிகள் நடவு செய்யப்பட்டன.மேலும், 'பிளாஸ்டிக்' மறுசுழற்சிக்கு, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் 'பேலிங்' இயந்தரம் பொருத்தப்பட்டது.இதன் திறப்பு விழாவுக்கு தலைமை வகித்து, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், ''நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில் ஆறுகள், கால்வாய்கள் 'கிளீன் குன்னூர்' அமைப்பின் தன்னார்வலர்கள் மூலம் துார்வாரப்பட்டதால், மழையில் பாதிப்பின்றி தண்ணீர் செல்கிறது.மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 'பிளாஸ்டிக்' இல்லாத மாவட்டமாக, நீலகிரி திகழும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மக்கள் குடியிருக்கும் சுற்றுப்புற பகுதிகளை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்புணர்வு அவசியம். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, எந்த திட்டமும் வெற்றி பெறும்,'' என்றார்.விழாவில், நிதியுதவி அளித்த ஐதராபாத் நகரை சேர்ந்த தொழிலதிபர் ராஜ ஸ்ரீ, குன்னுார் நகராட்சி கமிஷனர் பாலமுருகன் (பொ), கிளீன் குன்னுார் அமைப்பு தலைவர் சமந்தா அயனா, செயலாளர் டாக்டர் வசந்தன் உட்பட பலர் பேசினர். தன்னார்வலர்கள் கவுரவிக்கப்பட்டனர். குன்னுார் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, பிருந்தாவன் பள்ளி, லாரன்ஸ் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!