Advertisement

தீபாவளி பொருட்கள் வழங்கல்

வருஷநாடு : மேகமலை வனப் பகுதிக்கு உட்பட்ட நொச்சிஓடை மலைக்கிராமத்தில் பழங்குடியினருக்கு பெரிய குளம் விழுதுகள் இளைஞர் மன்றம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக இம்மக்கள் தீபாவளி கொண்டாடும் வகையில் அவர்களுக்கு புதிய ஆடைகள் , அரிசி, வெல்லம், ரவை, சேமியா உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் விழா, நொச்சி ஓடை யில் நடந்தது.

மேகமலை ரேஞ்சர் சதிஷ்கண்ணன் தலைமை வகித்துஅப்பொருட்களை வழங்கினர். விழுதுகள் இளைஞர் மன்ற செயலாளர் சங்கிலித்துரை, பொருளாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் போலீஸ்காரர்கள் செந்தில், செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொண் டனர். இதில் 65 பேருக்கு பொருட்கள் வழங்கப்பட்டன.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement