Advertisement

லாரி கவிழ்ந்து ஒருவர் பலி

தேவதானப்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி 45. இவரது மனைவி முத்துலட்சுமியுடன் தேவதானப்பட்டியில் இருந்து தென்னை மட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு அய்யம்பாளையம் சென்று கொண்டிருந்தார். தேவதானப்பட்டி- வைகை அணை பிரிவு பைபாஸ் அருகே லாரி திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதனை ஓட்டிய செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.முத்துலட்சுமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. போலீசார் விசாரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement