Advertisement

மீண்டும் நிரம்புது மேட்டூர்: 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணையில் அதிகளவு அளவு நீர் நிரம்பி வருவதால், 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறியிருப்பதாவது:மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக உள்ளது. தற்போது 850 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 118.60 அடியாக உள்ளது.இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று இரவுக்குள் 120 அடியை எட்டி விடும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட உள்ளது. மேலும் அணையில் இருந்து நாளை(அக்.,23) காலை முதல் தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளது.


இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுத்தப்பட்டு உள்ளதுவெள்ள அபாயம் குறித்து சேலம், ஈரோடு கரூர், நாமக்கல், பெரபம்பலூர், திருச்சி ,அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் , திருவாரூர், நாகை , கடலூர் மாவட்ட கலெக்டர்களுக்கு தகவல் அனுப்பபட்டு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    இந்த தண்ணியையாவது கடலுக்கு அனுப்பாம ஏரிகுளங்களில் சேர்த்து வையுங்க

  • தேவதாஸ், பூனே -

    இந்த தண்ணீரை மீண்டும் கடலில் சேர்ப்போம்....... எங்களை நம்புங்கள்

  • Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ

    இயற்கையின் கொடை மழைநீர். கடந்த 3 - 4 ஆண்டுகளாக மேட்டூர் அணைநிரம்பி பெரும்பகுதி குடிநீர் வீணாக கடலில் கலக்கிறது. தமிழகத்தின் வட மாநிலங்கள் குறிப்பாக சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம் மாவட்டங்கள் குடிதண்ணீர் இன்றி தவிக்கின்றன. இதுபோல கடலில் கலக்கும் நீரை திருப்பி பற்றாக்குறை மாநிலங்களுக்கு திருப்பி விட்டால், தண்ணீர் பஞ்சம் தீர்க்கப்பட்டு விடும். பற்றாக்குறை வரும்போது மட்டும் அதைப்பற்றி பேசுவார்கள் அரசியல்வாதிகள். இதுபோன்ற உருப்படியான திட்டங்களை செயல்படுத்துவார்களா?

Advertisement