Advertisement

2020- அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக அரசு, 2020ல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு, 2015ல் 24 நாட்கள், 2016ல் 23, 2017 ல் 22; 2018 ல், 23, 2019 ல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்திருந்தது. அடுத்த 2020ம் ஆண்டிற்கும் நடப்பு ஆண்டை போலவே, 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும், மூடப்பட வேண்டும். அனைத்து, சனி, ஞாயிற்று கிழமைகளும், விடுமுறை நாட்கள்.

பொது விடுமுறை நாட்கள் விவரம் வருமாறு:
எண். பண்டிகை- தேதி- கிழமை
01. ஆங்கில புத்தாண்டு -01.01.2020- புதன்
02. பொங்கல் -15.01.2020- புதன்
03. திருவள்ளுவர் தினம் -16.01.2020- வியாழன்
04. உழவர் திருநாள் -17.01.2020 -வெள்ளி
05. குடியரசு தினம் -26.01.2020- ஞாயிறு
06. தெலுங்கு வருடப்பிறப்பு- 25.03.2020 -புதன்
07. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு -01.04.2020 -புதன்
08. மகாவீர் ஜெயந்தி- 06.04.2020- திங்கள்
09. புனித வெற்றி- 10.04.2020- வெள்ளி
10. தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்- 14.04.2020 - செவ்வாய்
11. மேதினம் - 01.05.2020- வெள்ளி
12. ரம்ஜான் - 25.05-2020- திங்கள்
13. பக்ரீத்-01.08.2020- திங்கள்
14. கிருஷ்ண ஜெயந்தி- 11.08.2020- செவ்வாய்
15. சுதந்திர தினம் - 15.08.2020- சனி
16. விநாயகர் சதுர்த்தி - 22.08.2020- சனி
17. மொகரம் - 30.08.2020 -ஞாயிறு
18. காந்தி ஜெயந்தி - 02.10.2020 - வெள்ளி
19. ஆயுத பூஜை-25.10.2020- ஞாயிறு
20. விஜயதசமி- 26.10.2020- திங்கள்
21.மிலாது நபி-30.10.2020- வெள்ளி
22. தீபாவளி- 14.11.2020- சனி
23. கிறிஸ்துமஸ் - 25.12.2020- வெள்ளி

ஜனவரி மாதத்தில் 5 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 4 நாட்களும், ஆகஸ்ட் மாதத்தில் 5 நாட்களும், அக்டோபர் மாதத்தில் 4 நாட்களும் விடுமுறை பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  இந்துக்களுக்கு ஏன் கிருஸ்துமஸ் ரம்ஜான் லீவு ? அதே போல் கிருத்துவர்களுக்கு முஸ்லீம்களுக்கு ஏன் இந்துக்களின் பண்டிகைகளுக்கு லீவு ? அரசாங்கம் சிந்திக்கட்டும்

 • Senguraja - Tamil,இந்தியா

  தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் அரசாங்க ஊழியர்களை போல் விடுமுறை விட்டால் என்ன? வாய்கிழிய பேசும் கம்யூனிசம் எங்கே????????

 • Kundalakesi - Coimbatore,இந்தியா

  only 10 days public holidays in my office. If I want, I can apply casual/privilege leave. Why these many days holidays for govt staffs who earns in crores every year. I know a SI who joined the service 2 years back and now constructing a house after buying a car, royel enfield bullet, R15, hondo activa (for dad). These types of guys works 4/5 hours per day 365 days a year.

 • rajan -

  ஆக, பொது விடுமுறை 23 நாட்கள் வருடாந்திர வார நாட்கள் விடுமுறை குறைந்தது 104 நாட்கள் அதாவது சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை அதுமட்டுமின்றி privilege leave sick leave casual leave என்று 45 நாட்கள் மொத்தம் வருடாந்திர லீவு 172 நாட்கள் போய்விடுகிறது. மீதமுள்ள 193 நாட்கள் மட்டுமே இவர்கள் ஒரு வருடத்திற்கு வேலை செய்கிறார்கள் அதாவது சராசரியாக ஒரு மாதத்திற்கு 16 நாட்கள் மட்டுமே இவர்கள் வேலை செய்கிறார்கள் அதற்கு இவர்களுக்கு 30 நாட்களுக்கு உண்டான ஊதியம் கொடுக்கப்படுகிறது. 193 நாட்களில் இவர்கள் என்ன வேலை செய்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஆனால் சம்பளம் பற்றவில்லை என்று கூப்பாடு போடுகிறார்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். மனசாட்சி உள்ள அனைவரும் மேற்கூறியவற்றை சிந்தித்துப் பாருங்கள். தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு வருடாந்திர லீவு 10 நாட்கள் மட்டுமே வார விடுமுறை ஞாயிறுதோறும் மட்டுமே. சில சமயங்களில் விடுமுறை நாட்களிலும் பணிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது குறிப்பாக கட்டுமானத்துறை சேர்ந்தவர்களுக்கு நேரம் காலம் விடுமுறை எதுவுமே கிடையாது. ஆனால் இவர்களுக்கு ஊதியம் அரசு ஊழியர்களை விட குறைவாகவே கிடைக்கிறது. வேறுவழியின்றி நிர்ப்பந்தத்தின் காரணமாக நிரந்தர பணி இன்றி ஒப்பந்தத்தின் பேரில் consolidated சம்பளத்திற்கு பணிபுரிகிறார்கள்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  1 ஆங்கில புத்தாண்டு 2- தெலுங்கு வருடப்பிறப்பு- 3 - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு ,4. மகாவீர் ஜெயந்தி, 5,காந்தி ஜெயந்தி -6 மிலாது நபி- ஆகியவை அனாவசிய விடுமுறைகள் . தமிழ்ப் புத்தாண்டு விடுமுறையை தவிர மற்ற புத்தாண்டுகள் நமக்கு சம்பந்தமில்லாதவை. மீலாது நபி முஹர்ரதுக்கு இஸ்லாமிய நாடுகளிலேயே விடுமுறை கிடையாது .99 %பேர் மஹாவீர் ஜெயந்தி கொண்டாடுவதில்லை . தனது பிறந்த நாளில் உழைக்கத்தேவையில்லை என்பதை காந்தி ஏற்றுக்கொள்ளவேமாட்டார் அதிகம் உழைத்து முன்னேறுவோம் .

Advertisement