Advertisement

தேசத்தின் மகன் காந்தி: பிரக்யா தாக்கூர்

போபால்: தேசத்தின் மகன் மகாத்மா காந்தி என பா.ஜ., எம்.பி., பிரக்யா தாகூர் தெரிவித்து உள்ளார்.

பா.ஜ.,வின் பெண் எம்.பி., யாக இருப்பவர் பிரக்யா தாகூர். இவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கூறி வருவது வழக்கம்.

தற்போது அவர் தேச தந்தை பற்றி கூறியதாவது: இந்த நாட்டிற்காக போராடியவர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள் தான். அந்த வகையில் தேச விடுதலைக்காக போராடிய மகாத்மாவும் தேசத்தின் மகன், மண்ணின் மகன். இவர் மட்டுமல்ல கடவுள் ராமர், சத்ரபதி சிவாஜி மகாராணா பிரதாப் ஆகியோரும் தேசத்தின் மகன்களே.
தேசத்தின் நலனுக்காக பாடுபட்ட அனைவருமே எங்களின் மரியாதைக்குரியவர்கள் . அவர்கள் காட்டும் வழியில் நாங்கள் செல்கிறோம். எங்களை பொறுத்த வரையில் தேசம் மிக உயர்ந்தது என்றார்.

மேலும் பா.ஜ., சார்பில் நடத்தப்படும் சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளாதது குறித்து காங்., கேள்வி எழுப்பி உள்ளது. எது சரி, எது தவறு என காங்கிரஸ் எங்களுக்கு உத்தரவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ

    இதை சொல்வது யார்... 'மத'ம் பிடித்த தீவிரவாதி...

  • Arasu - OOty,இந்தியா

    நாட்டின் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்ப அவ்வப்போது பிஜேபிஇல் இருந்து ஏதாவது ஒரு கருத்தை சொல்லும் காவிகள்

  • RM -

    தேசத்தின் மகன் வழி செல்பவர்கள்வெடிகுண்டு வைக்கமாட்டார்கள்.அஹிம்சாவழி செல்வார்கள். நீங்கள் எந்தவழக்கில் உள்ளீர்கள், உங்களுக்குத்தெரியும்

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    \\\\ பா.ஜ.,வின் பெண் எம்.பி., யாக இருப்பவர் பிரக்யா தாகூர். இவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கூறி வருவது வழக்கம். ////

  • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

    முழு பேச்சையும் பார்த்தால் இவர் என்ன தவறாக சொன்னார் என இப்படி தலைப்பு கொடுக்கிறீர்கள்?

Advertisement