Advertisement

உயரதிகாரிகள் மீது குற்றச்சாட்டு: இன்போசிஸ் பங்குகள் வீழ்ச்சி

புதுடில்லி: இன்போசிஸ் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும், தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகியோர், குறுகிய கால வருவாய் மற்றும் லாபத்தை உயர்த்துவதற்காக, நெறிமுறையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக, 'நெறிமுறை கொண்ட ஊழியர்கள்' என்ற பெயரில், ஒரு குழுவினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்நிறுவனத்தின் பங்குகள் விலை நேற்று, 16.21 சதவீதம் சரிந்தது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பும், 53 ஆயிரத்து, 451 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில், ஒரு பங்கின் விலை, 16.21 சதவீதம் சரிந்து, 643.30 ரூபாயாக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில், 16.65 சதவீதம் குறைந்து, ஒரு பங்கின் விலை, 640 ரூபாயாக நிலைபெற்றது.இதையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 2.76 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.நிறுவனத்தின் இரண்டு உயரதிகாரிகள் மீது, ஒரு குழுவினர் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், நிறுவனத்தின் நடைமுறைப்படி இந்த புகாரானது தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனி, இப்புகார் மீது தனிக்கை குழு சுதந்திரமான விசாரணையை நடத்தும் என தெரிவித்துள்ளார்.இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தைமதிப்பு சரிந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு வர்த்தகத்தினிடையே மீண்டும், 9 லட்சம் கோடி ரூபாயை தொட்டது. வர்த்தகத்தின் முடிவில், சந்தை மதிப்பு, 8.98 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • Sweetline -

  dinamalar should write in details on why it came down. The reason for this is calling 2 board of directors as madarasi fellows and mentioning another north indian person with caste name. inappropriate words let them go down. My dear Tamil people are also using such shaming words on other tamil people as dumilans and all. People never worry about how others feel nowadays.

 • ஆப்பு -

  நேரு செஞ்ச சதின்னு இழுத்து மூடிருங்க....மக்கள் நம்பிருவாங்க.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தனியார் மயமாக்க வேண்டும் என்று துடிக்கும் கூட்டம் என்ன சொல்கிறது? பொதுத்துறைகள் பொய்யான கணக்கு காட்ட மாட்டார்கள். தனியார் துறைகளில் பொய்யான கணக்கு வாடிக்கை தான் என்று ஒத்துக் கொள்கிறார்கள்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மிகவும் குறுகிய காலத்தில் கொள்ளை கொள்ளையாய் பணம் எடுக்கவேண்டும் என்பதில் அதிதீவிரமாக இருப்போர் மிக அதிக சொத்துக்களையுடையோர் தான். ஏற்கனவே பொய் கணக்குகள் மூலம் அதிக லாபமீட்டியவர்கள் அதே பாதையை தொடர்ந்து பின்பற்றுகின்றனர். நேர்மையான அரசிற்கும் சிக்கலை இடைஞ்சலை உருவாக்குகின்றனர். தர்ம வழி பிறழ்வோர் கடுமையாக தண்டிக்கப்பவேண்டியவர்களே. ஆராய்ந்து பார்த்தால் அரசியல்வாதிகளை தவறான பாதைக்கு மாற்றியவர்களும் குற்றம் செய்ய வைத்தவர்களும் தவறான வியாபாரிகளே.

 • blocked user - blocked,மயோட்

  IT நிறுவனங்கள் பணம் கொழிக்கும் இடமாதலால் உயர் அதிகாரிகள் பலர் அதன் பலனை அதிகார வரம்பையும் மீறி அனுபவிப்பது அதிசயம் ஒன்றும் இல்லை. போனஸ் மற்றும் சம்பள உயர்வு நிறுவனத்தின் செயல்பாடு, பங்கின் விலையை (நிறுவனத்தின் சந்தை மதிப்பு) மற்றும் அந்த ஊழியரின் செயல்பாடு போன்றவற்றை வைத்து நிர்ணயிக்கப்படும். நிறைய நிறுவனங்கள் சம்பளத்தை விட அதிக போனஸ் கொடுப்பது உண்டு (அது காலவரையறை உள்ள பங்காகவோ அல்லது பணமாகவோ அல்லது வெளிநாட்டு சுற்றுலாவாகவோ இருக்கும்). சில நேரங்களில் நிறுவனம் சந்தை நிலவரத்தை பொறுத்து குறைந்த வருவாயை பெறலாம். அப்படி வருமானம் குறையும் பட்சத்தில் நிறுவனத்தின் பங்கு விலை குறையலாம் அல்லது நிறுவனம் ஊழியர்களுக்கு கொடுக்கும் போனஸ் தொகையை குறைத்துக்கொள்ளலாம். ஒரு சில நிறுவனங்களில் நிதித்துறையில் சில விஷமிகள் இருப்பார்கள். இவர்கள் வதந்திகளை பரப்பி செயற்க்கையாக பங்கு விலையை குறைத்து பங்குகளை வாங்க முயற்சிப்பார்கள். அதே சமயம் வருமானத்தை அதிகமாக காட்டி அதிக போனஸ் பெற முயற்சிப்போரும் உண்டு. இது போன்ற சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களை ஆடிட் செய்ய நியமிக்கப்படும் நிறுவனங்கள் ஏராளமான பங்கு ஒழுங்கீடு செய்யும் அரசு துறையை அல்லது தனிப்பட்ட மேம்பட்ட நெறி முறைகளை பின்பற்றும். நம்மூர் நிறுவனங்கள் பொதுவாக ஊழியர்கள் பங்குதாரர்களை விட அதிகமாக அனுபவிப்பர். இதுவும் அது போலத்தான் - ஆனால் மதிப்பீட்டை சரிக்கட்ட ஒழுங்கற்ற நெறிமுறைகளை பின்பற்றியது போல தெரிகிறது.

Advertisement