Advertisement

அபராதம் ! கொசு உற்பத்திக்கு வழிவகுத்தால்.. தொகையை திருத்தியமைத்தது மாநகராட்சி

சென்னையில், கொசு உற்பத்திக்கு வழிவகுப்போருக்கு விதிக்கப்படும் அபராத தொகை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில், டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரித்து வருகின்றன.காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில், 50க்கும் மேற்பட்டோர், தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 2,000க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஓர் இடத்தில், 'ஏடிஸ்' கொசு உற்பத்தியானால், அது, சுற்றியுள்ள, 2 கி.மீ., துாரம் வரை, டெங்கு காய்ச்சலை பரப்பும். இதை தடுக்கும் வகையில், 'ஏடிஸ்' கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, கொசுப் புழுக்களை அழிப்பதுடன், கொசுப் புழு உருவாகும் வகையில், சுகாதாரமின்றி வளாகத்தை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

நடப்பாண்டில் இதுவரை, 50 லட்சம் ரூபாய்க்கு மேல், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கொசு வளர காரணமாக இருக்கும் இடங்களின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, சென்னை மாநகராட்சி திருத்தி அமைத்துள்ளது. இதில், கடந்த காலங்களில், குடியிருப்புகளுக்கு, 500 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட அபராத தொகை, தற்போது, 200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு கட்டடங்களுக்கான அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.புதிய அபராத தொகை

- நமது நிருபர் -
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • rajan -

    குப்பைகளை அகற்றாத மாநகராட்சிகள் அபராதம் விதிக்க வேண்டும். பாதி குப்பையை அள்ளி விட்டு சாலை முழுவதும் பாதி குப்பையை போட்டுவிட்டு செல்கிறார்கள் குப்பை லாரி ஊழியர்கள். செப்பனிடப்படாத சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உருவாகிறது. அனேக இடங்களில் மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு மூட்டை மூட்டையாக சாலை ஓரத்திலேயே கட்டி வைத்துள்ளார்கள். அவைகளை உடனே அகற்றாமல் காலம் கடத்தி வருகிறார்கள். தற்போது பெய்து வரும் சிறிய மழைக்கு அந்த மூட்டைகள் சேதமடைந்து தூர்வாரப்பட்ட கழிவுகள் துர்நாற்றம் வீசுகிறது. இந்த அவலங்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக ஊர் வரப்பட்ட மணல் மூட்டைகள் மற்றும் சாலைகளில் சிதறிய கழிவுகளை அதைப்பற்றி சுகாதார பணியை முடுக்கி விட வேண்டும். மாநகராட்சியின் இப்படிப்பட்ட அலட்சியப் போக்கை ஊடகங்கள் படம்பிடித்து வெளியிட வேண்டும். மேலும் சுகாதாரத்தை பராமரிக்க தவறிய அதிகாரிகள் மீது அபராதம் விதிக்க வேண்டும். வீட்டுக்கு வீடு சென்று அபராதம் வசூலிக்கும் அதிகாரிகள் மனசாட்சி இருந்தால் தங்கள் பணியை முதலில் சரியாக செய்யட்டும். அபராதம் விதித்தும் இவ்வளவு லட்சம் வசூலித்தது என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள வேண்டாம்.

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    குப்பைமலை, சிறுநீர் ஆறு, இறந்து போன மற்றும் அழுகிப்போன பறவைகள் மற்றும் மிருகங்களின் கழிவுகள், உணவு விடுதிகளில் இருந்து தெருவில் வீசப்படும் கழிவுகள், இறைச்சி கழிவுகள் , சாக்கடை நீர் அடைத்துக்கொண்டு ஆறாய் வருகிறது நடவடிக்கை எடுக்க முடியமா? மாநகராட்சியை கொட்டுகிறது? இதற்க்கு? காலத்தின் கோலம், வந்தே மாதரம்

Advertisement