Advertisement

அமித்ஷாவுடன் பேச வங்கதேச அரசு விருப்பம்

கோல்கட்டா: எங்கள் வீரர்களின் தாக்குதலில், இந்திய வீரர் பலியான விஷயத்தில், இரு தரப்பு உறவு பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ''தேவைப்பட்டால், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், இது குறித்து பேசி, பிரச்னைக்கு சுமுக தீர்வு காண தயார்,'' என, அண்டை நாடான வங்கதேச உள்துறை அமைச்சர், அசாதுஸ்மான் கான் கூறினார்.
இந்தியா - வங்கதேச எல்லையில், பத்மா ஆற்றில், வங்கதேச வீரர்கள் நடத்திய தாக்குதலில், பி.எஸ்.எப்., எனப்படும் இந்திய எல்லை பாதுகாப்பு படையச் சேர்ந்த வீரர் ஒருவர் பலியானார்.

இந்நிலையில், வங்கதேச உள்துறை அமைச்சர், அசாதுதீன் கான் கூறியதாவது:இரு நாட்டு வீரர்களுக்கு இடையே நடந்த தவறான புரிதலால், பி.எஸ்.எப்., வீரர் பலியாகி விட்டார்; இது, எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், போதிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், இந்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவிடம் இது குறித்து பேசி, பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும். வங்கதேச வீரர்கள் வசம் உள்ள இந்திய மீனவர், விரைவில் விடுவிக்கப்படுவார். இந்த சம்பவத்தால், இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு, எந்த வகையிலும் பாதிக்கப்படாது.துரதிர்ஷ்டவசமாக நடந்த இந்த சம்பவத்துக்கு, வங்கதேச அரசு சார்பில் வருத்தம் தெரிவிக்கிறேன். இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள், விரிவான பேச்சு நடத்தி, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே, எங்கள் விருப்பம். இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, பி.எஸ்.எப்., வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்ட போலீசில், இந்திய எல்லை பாதுகாப்பு படை சார்பில், புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினருக்கு எதிராக, போலீசார், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • G.Kirubakaran - Doha,கத்தார்

    இதுவே மன்மோகன் அரசு ஆக இருந்தால் வங்க தேசம் ,வந்து பார் என்பார்கள்.

  • THENNAVAN - CHENNAI,இந்தியா

    முதலில் சுடடவனை இங்கு அனுப்பு ,பாகிஸ்தானுக்கு ஒரு நீதி,பங்களாதேசுக்கு ஒரு நீதி இந்தியா கடைப்பிடிக்கவேண்டியது இல்லை கண்ணுக்கு கண் ,உயிருக்கு உயிர் .

  • Pannadai Pandian - wuxi,சீனா

    how can a muslim nation be friendly nation to us or to the rest of the world.....they are human enemies...

  • Thirumal Kumaresan - singapore,இந்தியா

    எப்படி சுடலாம் நட்பு நாடுகள் எனில் பேசி தீர்வு கண்டிருக்கலாம்.எங்கள் வீரரின் உயிரை நீங்கள் தர முடியுமா.அந்த பொறுப்பற்ற அதிகாரி தண்டிக்க படவேண்டும்.

Advertisement