Advertisement

தமிழிசைக்கு தனி மரியாதை

புதுடில்லி: மாநில கவர்னர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அனைத்து கவர்னர்களும், உள்துறை அமைச்சரை சந்தித்து, ஆலோசனை நடத்துவர். சில கவர்னர்கள், பிரதமரையும் சந்திப்பர்.
ஆனால், சமீப காலமாக, கவர்னர்களைச் சந்திப்பை, பிரதமர் மோடி தவிர்த்து வருகிறார்.'முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும்' என கவர்னர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், 'எதுவாக இருந்தாலும் உள்துறை அமைச்சரிடம் சொல்லுங்கள்; முக்கியமான விஷயம் என்றால் உள்துறை அமைச்சர், பிரதமரிடம் பேசுவார்' என, பிரதமர் அலுவலகத்திலிருந்து சொல்லப்படுகிறதாம்.
தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தர ராஜன் பதவியேற்ற பின், சமீபத்தில் டில்லி வந்திருந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். பின், பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டார். பிரதமர் அலுவலகத்திலிருந்து, உடனடியாக அழைப்பு வந்தது.மோடியிடம், தெலுங்கான விவகாரங்கள் குறித்து, தமிழிசை ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் நிலை குறித்தும், பேசியதாக சொல்லப்படுகிறது.

கவர்னர்களைச் சந்திக்க தவிர்க்கும் பிரதமர், தமிழிசையை சந்திக்க எப்படி ஒப்புக் கொண்டார் என, டில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் ஆச்சர்யப்படுகின்றன. நம்ம ஊர் தமிழிசைக்கு, பிரதமர் தனி மரியாதை கொடுத்தது, அதிகாரிகள் வட்டாரத்தை மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும், ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  தமிழ் நாட்டில் தேர்தல் வரும்போது - கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று சொல்லிக்கொள்ள தான் . தமிழிழை கவர்னர் மோடியை பார்த்தார். தமிழ் நாட்டில் பாஜக முதல்வர் பதவிக்கு இப்போ பன்னீர்செல்வம் மட்டும் தான் ஒரு போட்டி வேண்டாமா அதான் கவர்னர் தமிழிசை தேர்தல் நேரத்தில் தமிழ் நாட்டில் இருப்பார் பாருங்கள்

 • Vetri Vel - chennai,இந்தியா

  அழகான அம்மணி...

 • oce - kadappa,இந்தியா

  நல்ல பெண்மணி மிக நல்ல பெண் மணி. தமிழக அதிமுக ஆட்சியில் பாஜக பங்கேகும் நாள் நெருங்கி விட்டது அப்போது இந்த நல்ல பெண்மணி தான் தமிழக ஆளுநர்.

  • Jegan - Nagercoil,இந்தியா

   தமிழர் தமிழக ஆளுநராக வர முடியாதே

 • சீனி - Bangalore,இந்தியா

  காங்கிரஸ் குமரி ஆனந்தனை பயன்படுத்தி தூக்கி எறிந்த மாதிரி, தமிழிசையை பி.ஜே.பி விட்டுவிடவில்லை. தமிழர்கள் இவருக்கு பதவி வழங்கவில்லையெனிலும், நல்ல மரியாதையான கவர்னர் பதவி கிடைத்துள்ளது. காமராஜரையே கவுத்தங்களாச்சே தமிழர்கள். வாழ்க டாஸ்மாக், வெல்க டாஸ்மாக்.

  • ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா

   குமரி அனந்தனை காங்கிரஸ் பயன்படுத்தி தூக்கி எறிந்தது என்று கூறியுள்ள உங்கள் அன்பு நண்பரே சிறிய திருத்தம்.. காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா போன்ற நேர்மையான தலைவர்களின் தலைமையின் கீழ் இயங்கிய ஸ்தாபன காங்கிரஸ் என்ற உண்மையான காங்கிரஸில் இருந்த ஒரு நேர்மையாளர் குமரி அனந்தன். நேர்மையான அந்த தலைவர்களின் மறைவுக்குப்பின்னர், தேசிய நீரோட்டம் மிக்க தலைவர்கள் யாரும் இல்லாததால் தேசியக்கட்சியாக இருந்த இந்திரா காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார். .. அவரை இந்திரா காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலை போல தூக்கி எறிந்து விட்டது... இப்பொழுது கூட நேரு குடும்பத்தை சேர்ந்த யாரும் காங்கிரஸ் தலைவராக வரமாட்டோம் என்று கூறி ராகுல் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர்.. ஊழல்கள் இருந்தாலும், சிங்கம் போல நாடாளுமன்றத்தில் கர்ஜித்துக்கொண்டிருந்த கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே.. ஏன் இப்பொழுது ஜாமீன் பெற்றுள்ள சிதம்பரம் ஆகியோர் உள்ளிட்ட நேரு வின் மகள் வழிக் குடும்பத்தை சாராத எண்ணற்ற மூத்த தலைவர்கள் இந்திரா காங்கிரஸ் என்ற இந்த ஊழல் கட்சியில் உள்ளனரே .. இவர்களில் யாரையாவது தலைவராக நியமிக்கலாமே .. மீண்டும் இத்தாலி தலைவி மட்டுமே தான் இவர்களுக்கு கிடைத்தாரா?

 • Radj, Delhi - New Delhi,இந்தியா

  மேதகு தமிழிசை ஆளுநர் ஒரு உழைப்பாளி. தனக்கு கொடுத்த வேலையே சரியாக செய்வதால் தான் பிஜேபி மேலிடம் இவருக்கு தகுந்த மரியாதையை தருகிறார்கள். மற்றவர்களும் வேலை செய்தால் பதவி மற்றும் மரியாதையை தேடி வரும்.

Advertisement