Advertisement

காஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து

புதுடில்லி: கடந்த செப்டம்பரில் ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில், காஷ்மீர் பிரச்னை பற்றி, துருக்கி அதிபர் எண்ட்ரோகன் பேசியது, காஷ்மீர் பிரச்சினையை “நீதி, சமத்துவத்தின் அடிப்படையிலான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டுமே தவிர மோதல் மூலம் கிடையாது. “காஷ்மீர் மோதல்” சர்வதேச சமூகத்திடமிருந்து போதுமான கவனத்தை பெறவில்லை,” என பேசினார். துருக்கி அதிபரின் பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி இம்மாத இறுதியில் 2 நாள் பயணமாக துருக்கி செல்ல உள்ளார். சவுதி அரேபியா சென்று அங்கிருந்து துருக்கி தலைநகர் அங்காரா செல்ல இருந்தார். அங்கு அக்.27-28-ம் தேதிகளில் மெகா முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் மோடி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. துருக்கி அதிபரின் பாக். ஆதரவு பேச்சையடுத்து மோடியின் பயண திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (61)

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  முதல் போட்டோவைப் பார்த்தால், ஏதோ ஒரு கவிதை எழுதனும்போலத் தோனுது.

 • Jayvee - chennai,இந்தியா

  மதம் இவனை இப்படி மாற்றியுள்ளது (மலேசியா பிரதமறையும் சேர்த்து) என்று எடுத்துக்கொள்ளலாமா அல்லது இப்படி பட்ட கேடு கெட்ட ஜென்மங்கள்தான் இந்த மதத்திற்கு அடிமையாகவுள்ளதா ?

 • spr - chennai,இந்தியா

  திரு மோடியை விமரிசிப்பதாக நினைத்து காங்கிரஸ் பேசும் பேச்சுக்களும், காங்கிரசை எதிர்ப்பதாக நினைத்து, இந்த நாட்டின் முந்தைய பிரதமர் மற்றும் அதனால் நியமிக்கப்பட்ட மத்திய வங்கி போன்ற மத்திய அரசின் முக்கியமான அதிகாரிகளை வெளிநாட்டு சந்திப்பில் ஒரு ஆளும்கட்சி சார்ந்த பொறுப்புள்ள அமைச்சர் விமரிசிப்பதுவும் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் குறைத்து விடும் என்றதற்கு இதுவே ஆதாரம். "யாகாவாராயினும் நா காக்க" இந்தியாவிற்கு எதிராக பொதுவான நிலைப்பாட்டை எடுக்கும் நாடுகளுக்கு வியாபார வாய்ப்புக்களைக் குறைப்பது தீர்வல்ல. அவர்கள் காஷ்மீரில் பாகிஸ்தான் செய்வது சரி என்று சொல்லவில்லை நம் நிலைப்பாட்டை, அதன்நியாயத்தை, உடனடியாக அந்த அரசுத் தலைவர்களிடம் பேசுவதே சரியான முறை இல்லையேல் பாஜக அரசு இந்திய மக்களின் வரிப்பணத்தை வெளிநாட்டவருக்கு வியாபாரம் என்ற போர்வையில் (லஞ்சமாக) வழங்குவதால் மட்டுமே அதன் கொள்கைகளுக்கு வெளிநாட்டு அரசுகள் மதிப்பளிக்கின்றன என்று கூட நமது நாட்டு பொறுப்பற்ற எதிர்க்கட்சிகளுடன் இதர பாதிக்கப்பட்ட நாடுகளும் கூக்குரலிட ஆரம்பிக்கும். திரு மோடியின் வெளிநாட்டுக்கு கொள்கையே அவருக்குப்பெரு மதிப்பை உண்டாக்குகிறது எனவே அதனைக் குலைக்க வேண்டுமென நாட்டு நலனில் அக்கறையில்லாத காங்கிரசும் இதர எதிர்க்கட்சிகளும் தீர்மானித்தால், இப்படியே பேசி நாட்டின் மதிப்பை குலைத்துவிடுவார்கள்

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  துருக்கியின் மானங்கெட்ட செயல் குர்திஷ் இன மக்கள் வாழும் சிரியா பகுதியில் மீண்டும் போரை ஏற்படுத்தி தாக்குதலை நடத்தி 800க்கும் அதிகமான ஐ எஸ் பயங்கரவாதிகளை தப்பி ஓட செய்து விட்டது ....இஸ்லாமிய சிறுபான்மை குர்திஷ் இன மக்களை கண்டால் இவிங்களுக்கும் ஈராக்காரனுக்கும் இளக்காரம் தான்...ஏற்கனவே சதம் உசேன் அவுங்களை பாதி அழிக்க மீதியை இப்போ இவனுங்க செய்யறானுங்க .....

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  துருக்கி ஐ எஸ் ஐ எஸ் ஆதரவு ஆகவே இப்படித்தான் பேசும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக??? அதாவது எதையோ குளிப்பாட்டி .............அது அந்த இடத்தை நோக்கித்தான் செல்லும்.

Advertisement