Advertisement

தினமலர் பட்டம் வினாடி - வினா போட்டி திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி

திருவள்ளூர் : 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், 'பதில் சொல்; அமெரிக்கா செல் 2019-20' வினாடி-வினா, போட்டி, திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் நேற்று நடந்தது.

கோவை, அமிர்தா விஷ்வ வித்யா பீடம், லோட்டோ காபி பைட் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவை இணைந்து நடத்திய இப்போட்டியில், 950 மாணவ -- மாணவியர் பங்கேற்று, பொது அறிவு தேர்வு எழுதினர்.அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், ஓர் அணிக்கு இருவர் வீதம், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக, வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.


போட்டியில், முதல் இடம் பிடித்த, பிளஸ் 1 மாணவியர், என்.ஹரிணி, எஸ்.அஸ்விதா, ஆகியோருக்கு தங்கப்பதக்கம், 'தினமலர்' நினைவுக்கோப்பை, மற்றும் சான்றிதழ்; இரண்டு முதல், ஏழு இடங்களை பெற்றவர்களுக்கு, தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழினை, பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஷாலினி வழங்கினார்.மேலும், தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பட்டம் ஒருங்கிணைப்பாளர்களான, ஆசிரியர்கள் எம்.ரூபாவதி, ஜெ.எபினேசர் ஆகியோர் பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement