Advertisement

டெங்கு காய்ச்சல் சிறுவன் பலி

மாதவரம் : டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலியானான்.மாதவரம் மண்டலம், 24வது வார்டு, புத்தகரம், புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர், குணசேகரன். அவரது மகன்கள் அரவிந்தன், 10, அருணாச்சலம், 8, இருவரும், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.இருவரும், 'டெங்கு' காய்ச்சலால், உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, நேற்று காலை, எழும்பூர் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, பிற்பகல், 2:45 மணி அளவில், அரவிந்தன் உயிரிழந்தான். அருணாச்சலம் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement