Advertisement

ராம்ராஜ் காட்டன் நிறுவனருக்கு மகுடம் விருது

சென்னை : ராம்ராஜ் காட்டன் நிறுவனருக்கு, சிறந்த தொழிலதிபருக்கான, 'மகுடம்' விருது வழங்கப்பட்டது.'நியூஸ் 18' தொலைக்காட்சி சார்பில், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் பிரமுகர்களுக்கு, ஆண்டுதோறும், 'மகுடம்' விருது வழங்கப்படுகிறது.


இந்தாண்டிற்கான, மகுடம் விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, கிண்டியில், நேற்று முன்தினம் நடந்தது.நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், 'ராம்ராஜ் காட்டன்' நிறுவனர், கே.ஆர்.நாகராஜனுக்கு, சிறந்த தொழிலதிபருக்கான, 'மகுடம்' விருதை வழங்கினார். நிகழ்ச்சியில், மக்கள் நீதி மையம் தலைவர், கமல், வி.சி., தலைவர் திருமாவளவன், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மகாதேவன், கிருபாகரன், நடிகர்கள் பாக்யராஜ், விஜய் சேதுபதி, நடிகையர், குஷ்பு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement