Advertisement

தமிழகத்தில் 4 நாட்கள் மழை தொடரும்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பரவலாக, பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஒரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், தேவாலாவில் 13 செ.மீ.,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தற்போது, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கனமழையை பொறுத்தவரையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை 4 நாட்களுக்கு தொடரும்.

கேரளா, கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள், 19, 20, 21 தேதிகளில் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement