LOGIN
dinamalar telegram
Advertisement

நிலச்சரிவு பகுதியில் கல்குவாரி; அதிகாரிகள் ஆய்வில் தகவல்

Share
மூணாறு : கொச்சி- -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கல் குவாரி செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.

கொச்சி- -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே லாக்காடு கேப் ரோட்டில், அக்., 8, 11 ஆகிய தேதிகளில் ஒரே பகுதியில்நிலச்சரிவு ஏற்பட்டது.அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் வகையில் பாறைகள் ஆபத்தாக உள்ளன.ரோடு அகலப்படுத்தும் பணிக்கு கேப் ரோட்டில் இயற்கைக்கு விரோதமாக விதிமுறைகள் மீறி பாறைகள் உடைக்கப்பட்டது நிலச்சரிவுக்கு முக்கிய காரணமாக கருதப்பட் டது.

அங்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 1976 வரை கல் குவாரி செயல்பட்டதாகவும், அங்கிருந்து இடுக்கி மாவட்டம் முழுவதும் ரோடு பணிக்கு கற்கள் கொண்டு செல்லப் பட்டதாகவும் கண்டறிந்தனர். அப்போது பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களால் பாறைகளில் ஏற்பட்ட விரிசல்கள் மூலம் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

அப்பகுதியை புவியியல் வல்லுனர்கள்,ஜியோ டெக்னிக்கல் நிபுணர்கள், என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.டி., ஆகியவற்றைச் சேர்ந்தஅதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட குழு அடுத்த வாரம் ஆய்வு நடத்த உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் ரெக்ஸ் தெரிவித்தார்.-----------
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement