Advertisement

கீழ முஸ்லிம் பள்ளி மாணவர் மாநில செஸ் போட்டிக்கு தேர்வு

பரமக்குடி : -ராமநாதபுரம் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் தொண்டி இஸ்லாமியா மெட்ரிக்பள்ளியில் அக்.,16ல் நடந்தது. இதில் பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம்ஆகிய 3 கல்வி மாவட்ட பள்ளிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான மாணவர்கள்கலந்து கொண்டனர். பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம்மேல் நிலைப் பள்ளி மாணவர் சக்திதியானேஷ் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கானசெஸ் போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.இந்தமாணவன் அக்., மாத இறுதியில் நடக்கும் மாநில செஸ் போட்டியில் கலந்து கொள்கிறார்.மாணவன் சக்திதியானேஷ் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித்,சிவகுரு ராஜா, அன்வர்ராஜா ஆகியோரை பள்ளி தாளாளர் சாதிக்பாட்ஷா,தலைவர் முகம்மது யாக்கூப், செயலாளர் கமருல்ஜமாலுதீன், பொருளாளர் அபுல்கலாம்ஆசாத்,தலைமையாசிரியர் அஜ்மல்கான் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement