Advertisement

இறகுப்பந்து போட்டி: பரமக்குடி அணி வெற்றி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த 40 வயதிற்கும் மேற்பட்டோருக்கான இறகுப்பந்து போட்டியில் பரமக்குடி அணியினர் வெற்றி பெற்றனர்.போட்டிகளை டி.ஐ.ஜி., ரூபேஸ்குமார் மீனா துவக்கி வைத்தார். இதில் ஒற்றையர், இரட்டையர் என 68 அணிகள் பங்கேற்றன. 40 வயதிற்கு மேற்பட்ட ஒற்றையர் பிரிவில் பரமக்குடி சசிக்குமார் சாம்பியன் பட்டத்தையும், ராமநாதபுரம் மகேந்திரன் இரண்டாம் இடம் பெற்றார். இரட்டையர் பிரிவில் ராமநாதபுரம் ராம்சாகர், ஆறுமுகம் அணி சாம்பியன் பட்டத்தையும், திருவாடானை ரமேஷ், சக்தி அணியினர் இரண்டாம் இடமும் பெற்றனர்.பொது பிரிவில் கடலாடி கந்தவேல், பரமக்குடி கல்யாண் சாம்பியன் பட்டத்தையும், தொண்டி சாதிக்பாட்ஷா, அஷ்ரப் இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தொண்டி பாலாஜி காஸ் நிறுவனர் எம்.சசிக்குமார், த.மு.மு.க.,பிரமுகர் பட்டாணி மீரான் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் இறகுப்பந்து கழக செயலாளர் பிரபாகரன், துணைத்தலைவர்கள் பாஸ்கரன், அசோக்குமார் துணை செயலர் வள்ளல் செய்திருந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement