Advertisement

விபத்தில் ஒருவர் பலி

பரமக்குடி: பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லுாரை சேர்ந்தவர் முனியாண்டி 50. இவர் தனது புதிய டூவீலரில் தெளிச்சாத்தநல்லுாரில் இருந்து பரமக்குடி நோக்கி சென்றார். அப்போது மேலப்பெருங்கரையை சேர்ந்த குகன், தனது உறவினர் ராஜேஸ்வரியுடன் எதிரில் வந்துள்ளார். இருவரும் ெஹல்மெட் அணியவில்லை. தெளிச்சாத்தநல்லுார் அருகே மதுரை - மண்டபம் ரோட்டில் இரண்டு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதியதில் முனியாண்டி பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். குகன் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜேஸ்வரி சிறிய காயத்துடன் தப்பினார். முனியாண்டி மகன் அஜித்குமார் புகாரில் டவுன் எஸ்.ஐ., குமரேசன் விசாரிக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement