Advertisement

சிக்மா புகைப்பட கண்காட்சி

ஜப்பானைச் சேர்ந்த முன்னனி கேமிரா நிறுவனங்களில் ஒன்றான ‛சிக்மாவின்' கேமிரா மற்றும்லென்ஸ்கள் மிகவும் பிரபலமானவை.

நாட்டில் உள்ள முன்னனி புகைப்படக்கலைஞர்கள் ‛சிக்மா' கேமிரா மற்றும் லென்ஸ்களை உபயோகித்து எடுத்த புகைப்படங்களைக் கொண்ட புகைப்பட கண்காட்சி சென்னை கீரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித்கலா அகாடமியில் நடந்துவருகிறது.
வருகின்ற 17 ந்தேதி வெள்ளிக்கிழமை வரை கண்காட்சி நடைபெறும். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள படங்கள் பல வித்தியாசமாகவும் புதிய கோணத்திலும் உள்ளதால் நி்ச்சயம் பார்வையாளர்களை கவரும்.
சிக்மாவின் புகழ் பாடும் இந்த கண்காட்சியில் சிக்மா நிறுவனத்தின் கேமிரா மற்றும் லென்ஸ் போன்ற தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
-எல்.முருகராஜ்murugarajdinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement